மகாதிர்: டிஓஜே-இல் எனக்குச் செல்வாக்கு உண்டு என்பதை அடிமுட்டாள்தான் நம்புவான்

dr mமுன்னாள்      பிரதமர்     டாக்டார்   மகாதிர்     முகம்மட்,      தம்    சொல்லைக்   கேட்டுதான்    அமெரிக்க     நீதித்துறை(டிஓஜே)    1எம்டிபிக்கு   எதிராக  சொத்துப்  பறிமுதல்   வழக்குகள்     தொடுத்தது    என்று   கூறப்படுவதை   நம்புபவன்     ஒரு   அடிமுட்டாளாகத்தான்  இருப்பான்    என்றார்.

அதிகாரமற்றிருக்கும்   தம்   உத்தரவின்படிதான்  டிஓஜே   நடந்து  கொள்கிறது   என்பதைக்    கேட்கப்    பெருமையாக    இருக்கிறது    என்று   மகாதிர்   தம்  வலைப்பதிவில்    குறிப்பிட்டிருந்தார்.

“அமெரிக்க  நீதித்துறைக்கு    உத்தரவிடும்    அதிகாரம்    எனக்கிருக்குமானால்,    இந்நேரம்   ஒருவர்    பல  பில்லியன்      டாலரைக்   கொள்ளையிட்டதற்காகக்  கைது    செய்யப்பட்டுக்  கூண்டில்   நிறுத்தப்பட்டிருப்பார். தக்க   தண்டனையும்   விதிக்கப்பட்டிருக்கும்”,  என்றாரவர்.

“அவப்பேறாக,   ‘பல்லில்லா’   மலேசியாவின்   முன்னாள்   பிரதமரான   எனக்கு    அமெரிக்காவில்   மட்டுமல்ல   மலேசியாவிலும்    அப்படிப்பட்ட  செல்வாக்கெல்லாம்   கிடையாது.

“முட்டாள்கள்தான்   அதை  நம்புவார்கள்”,  என்று   கூறியவர்,  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்  கொடுத்த    ‘கையூட்டுகள்’தாம்  அவர்களை    அப்படிப்   பேச   வைக்கிறது    என்றார்.

ஜூன்   15-இல்,   டிஓஜே   மூன்றாவது   சொத்துப்  பறிமுதல்   வழக்கைத்   தொடர்ந்ததை    அடுத்து   மகாதிர்  மற்றும்   எதிரணியினரின்   தூண்டுதலின்பேரில்தான்   வெளிநாடுகள்    மலேசிய  விவகாரங்களில்    தலையிடுகின்றன    என்று   குற்றஞ்சாட்டப்பட்டு   வருகிறது.