கடப்பிதழ் வெளிநாடு செல்லும் உரிமையை கொடுத்து விடாது

puaஒரு  குடிமகன்   செல்லத்தக்க    கடப்பிதழ்   வைத்திருக்கலாம்   ஆனால்,  அது   வெளிநாடு   செல்லும்   உரிமையை    அவருக்குக்  கொடுத்து   விடாது   என்று   முறையீட்டு   நீதிமன்றம்   இன்று   தீர்ப்பளித்தது.

பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா   எம்பி   டோனி   புவா-வின்   மேல்முறையீட்டை த்  தள்ளுபடி   செய்த    நீதிபதி  முகம்மட்    ஸவாவி   முகம்மட்   சாலே   தலைமையிலான    மூவரடங்கிய   நீதிபதிகள்  குழு   இத்தீர்ப்பை    அளித்தது.  அக்குழுவில்   இருந்த   மற்றுமிருவர்   நீதிபதி   இட்ரிஸ்  ஹருன்,   நீதிபதி   கமர்டின்    ஹஷிம்   ஆகியோராவர்.

வெளிநாட்டுப்   பயணம்   தொடர்பாக    அரசியலமைப்பிலும்   எதுவும்   கூறப்படவில்லை  என்றும்   நீதிமன்றம்    குறிப்பிட்டது.

புவா   வெளிநாடு   செல்வது   தடுக்கப்பட்டதற்குக்  குடிநுழைவுத்  துறை  காரணம்   தெரிவிக்க    வேண்டிய   அவசியமில்லை   என்றும்   முறையீட்டு   நீதிமன்றம்   தீர்ப்பில்    கூறியிருந்தது.

புவா,  2015   ஜூலை   22-இல்   ஜாகார்த்தா   செல்ல  முயன்றபோது    தடுத்து   நிறுத்தப்பட்டார்.  நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்கு    விரோதமான   நடவடிக்கைகளில்   ஈடுபட்டதற்காக   புவாமீது    விசாரணை    நடந்து   வருவதாக   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்     காலிட்   அபு    பக்கார்    குடிநுழைவுத்  துறைக்குக்   கடிதம்   எழுதியிருந்ததால்   அவர்   தடுத்து   நிறுத்தப்பட்டார்.

அதைத்    தொடர்ந்து   புவா,  குடிநுழைவுத்துறையின்   முடிவுக்கு   எதிராக   வழக்கு    தொடர்ந்தார்.

கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றம்   அவரது   வழக்கைத்   தள்ளுபடி    செய்து   வெளிநாட்டுப்   பயணம்   என்பது   அனைவருக்கும்   உரிய   அரசியலமைப்புப்படியான   உரிமை   அல்ல    என்று   தீர்ப்பளித்தது.