ரஃபிஸி: நையாண்டி பண்ணுங்கள், ஆனால் எனது எச்சரிக்கை உண்மையானது

 

Rafizimockmeகடந்த சில வாரங்களாக வீழ்ச்சி கண்டு வரும் எரிபொருள் விலை காரணமாக சிலர் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலியை நையாண்டி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் தமது எச்சரிக்கை மிக உண்மையானது என்று கூறுகிறார்.

எரிபொருள் விலைக்கு உச்ச வரம்பு கிடையாது. உலக எரிபொருள் வி.லையை முன்கூட்டியே கணிக்க இயலாததால் விலை திடீரென தலைகீழாய் மாறும்.

குறைகூறுகிறவர்கள் கச்சா எண்ணெய் சந்தை எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்திக்க மாட்டார்கள் என்று கூறிய ரஃபிஸி அது எப்படி செயல்படுகிறது என்பதையும் விளக்கினார்.

கடந்த ஐந்து வாரங்களாக எரிபொருள் விலை குறைந்து வந்துள்ளதைத் தொடர்ந்து இப்போக்கு நாளையிலிருந்து மாறி விலை உயந்து கொண்டே போகும் என்றாரவர்.

எரிபொருள் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்தால்தான் பயனீட்டாளர்கள் மன நிம்மதி அடைவர் என்று அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறார்.

இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்றும் அது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.