தமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில், டாக்டர் ஜெயக்குமார் தனது சொத்து அறிவிப்பில் சில சொத்து விவரங்களை வெளியிடவில்லை எனவும், அவரது தந்தையின் வழி கிடைக்கப் பெற்ற சொத்துகள் பற்றி தெரிவிக்கவில்லை எனவும் சிவநேசன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மே 23-ல், டாக்டர் குமார் அப்பத்திரிக்கை அறிக்கையை மீட்டு கொள்ளக் கேட்டு, தனது வழக்கறிஞர் வழி நோட்டிஸ் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சிவநேசன், அச்செய்தியில் தான் தவறாகவோ அல்லது டாக்டர் ஜெயக்குமார் பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போலவோ எதுவும் கூறவில்லை என்று மே 29இல், பதில் கடிதம் அனுப்பியதாக டாக்டர் குமார் தெரிவித்தார்.
அந்தத் தவறான செய்தியைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிவநேசனை மன்னிப்பு அறிக்கை விடக் கூறுமாறு, ஜனநாயகச் செயல் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் சிலரிடம் பேசியதாகவும், ஆனால், எந்தவொரு பலனும் அதனால் ஏற்படவில்லை எனவும் டாக்டர் குமார் வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, நீதிமன்றம் செல்லாமல் சுமூகமானத் தீர்வு காண அவர்கள் உதவுவார்கள் என்று எண்ணியே அவர்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“பி.எஸ்.எம். கட்சியைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் ஒவ்வொரு ஆண்டும் சொத்தைப் பொதுவில் அறிவிக்க வேண்டும். அப்படி சொத்து அறிவிப்பு முழுமையாக இல்லாவிட்டால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பது போலாகிவிடும். ஆகவே, கடந்த மே 21-ல் வெளிவந்த சிவநேசனின் பத்திரிக்கை அறிக்கை, என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதோடு, என் சொத்து அறிவிப்பும் நம்பகதன்மையை இழந்துள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவேதான், நான் அ. சிவநேசன் மீது, இன்று இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளேன்”, எனவும் பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் இன்று காலை ஈப்போ செஷன் நீதிமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தம்பி சிவநேசன் ஒரு அரை வேக்காடு. சிவநேசனை வம்புக்கிழுத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துக் கொள்கிறார், டாக்டர் ஜெயக்குமார்.
ஐயா ஜெயக்குமார் அரசியலில் இதுவெல்லாம் சாதாரணம் !! சமுதாயத்திற்காக தனது சொத்துக்களை தந்த உமது தொகுதியின் சம்பந்தனாரை இன்றைய தலை முறை குறை சொல்ல வில்லைய
!!! மடியில் கனமில்லை !! எதற்கு வம்பு வழக்கு !! படிக்காத தமிழன் வெட்டி கொண்டு சாகிறான் !! படித்த தமிழன் ! டாக்டரும் , லாயரும் , வழக்காடி சாகிறான் !! சமுதாயம் உருப்படும் !!!!
நண்பர் s.maniam, நறுக்கென்று அழகாக சொல்லியுள்ளார். ஒரு ம.சீ.ச. காரனிடமோ, ம.இ.கா. காரனிடமோ, அம்னோ காரனிடமோ, இவர்கள் தங்கள் வீரத்தை காட்டினால் நன்றாயிருக்கும். “தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்கு கயிறாம்”.