சுற்றுலா வரி தாக்கத்தைச் சமாளிக்க சலுகைகள்: நஸ்ரி வாக்குறுதி

nazriசுற்றுலா  வரியால்  பாதிப்புறும்   சுற்றுலா    சங்கங்கள்   பாதிப்புகளைத்   தாங்கிக்கொள்வதற்கு     உதவியாக    ஊக்குவிப்புகளும்    தனிக்  கவனமும்   வழங்கப்படும்   எனச்   சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்   முகம்மட்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்   உறுதியளித்துள்ளார்.

மலேசிய   உள்ளூர்   சுற்றுலா   சங்க  (மிடா)த்   தலைவர்   உஸைடி   உடானிஸ்,   தாங்களும்   மலேசிய    சுற்றுலா  மன்றம் (எம்டிசி),  மலேசிய    சீனச்  சுற்றுலா   சங்கம் (எம்சிடிஏ)    ஆகியவையும்    அமைச்சருடனும்   அமைச்சின்   அதிகாரிகளுடனும்   கூடிப்   பேசியதன்  விளைவாக   இந்த   வாக்குறுதி    பெறப்பட்டதாகக்   கூறினார்.

சுற்றுலா   வரியின்   காரணமாக   ஏற்கனவே   ஒத்துக்  கொள்ளப்பட்ட    குழுச்  சுற்றுலாப்  பயணங்கள்    இரத்துச்   செய்யப்படும்   அபாயம்    இருப்பதால்  அமைச்சரைச்   சந்திக்க   வேண்டியதாயிற்று   என    உஸைடி    தெரிவித்தார்.

“குழுச்   சுற்றுலாப்  பயணங்களுக்காக    ஒப்பந்தங்கள்   செய்யப்ப்ட்டிருப்பதைக்   கருத்தில்  கொண்ட   அமைச்சர்,   ஒப்பந்தங்கள்   இரத்து  செய்யப்படாதிருக்க     சிறப்பு   கவனமும்   ஊக்குவிப்புகளும்   வழங்கப்படும்   என   உறுதி   கூறினா,