அடுத்து வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு போலீஸ் படையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்-அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார்.
இரண்டு நாள்களுக்குமுன் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய மாற்றங்கள் குறித்து வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“பொதுத் தேர்தலையும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்கொள்ள போலீசைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
“அதற்காகத்தான் இத்தனை திருத்தங்கள், இடமாற்றங்கள்”, என்றாரவர்.
இதிலிருந்து புரிய வேண்டும்– என்ன தில்லு முள்ளு திருகு தாளம் செய்ய வேண்டும் என்று தயார் படுத்தி எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறான்.
தயவுசெய்து நேர்மை, பகுத்தறிவு, ஊழல்புரியாத, இலஞ்சம் வாங்காத , மதம் , இனம் பார்க்காத , நாட்டை மேன்படுத்த கூடிய ஆற்றல் மிகுந்த ஆங்கிலம் நன்கு பேசதெரிந்த அதிகாரிகளாக இடம்மாற்றி நாட்டை மேன்படுத்த ஆவணசெய்யும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . அதேவேளையில் நிருபர்கள் ஆங்கிலத்தில் கேள்விக்கணைகளை தொடுக்கும்போது , ஒரு சொள்ளைமட்டும் ஆங்கிலத்தில் தடுமாற்றத்துடன் கூறிவிட்டு ‘அப்பா இனி – அப்பா இனி’ (appa ini ) என மலாய் மொழியில் பேசி தடுமாறுவதை தாங்கள் தவிர்த்து நல்ல புலமையுடன் தடுமாறாமல் ஆங்கிலம் பேசுவாராக இருக்க தயார் படுத்திக்கொள்ளுங்கள் . நன்று .
சிவலிங்கம் அவர்களே, தங்கள் வேண்டுகோள் நிறைவேறவேண்டும். அனைவரது எதிர்ப்பார்ப்பும் அதுவே ! என் தாய் தமிழ் அவர்களே, தங்களது கருத்துப்பதிவை வாசித்தப்பின் என்னையும் மறந்து சிரித்துவிட்டேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. நாட்டு நடப்பை துல்லியமாக அறிந்திருக்கிறீர்கள்.