பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாங்கில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுவதை நிராகரித்தார்.
“முன்பே சொல்லி விட்டேன், அம்பாங்கில் போட்டியிட விரும்பவில்லை. நான் வேறு எங்காவது போட்டியிட வேண்டும் என்று கட்சி விருப்பப்பட்டால் பெக்கானில் போட்டியிட விரும்புகிறேன்”, என்று அஸ்மின் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
பெக்கான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோட்டை. 1976-இலிருந்து அவர் அங்கு போட்டியிட்டு வருகிறார். தொடர்ந்து வெற்றிதான். ஒரே ஒரு முறை கிட்டத்தட்ட தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டது- 1999-இல் ரிபோர்மாசி உச்சக்கட்டத்தில் இருந்தபோது.
அம்பாங் எம்பி சுரைடா கமருடினுக்கு வாக்காளர்களிடம் செல்வாக்கு குறைந்து விட்டதால் அஸ்மின் அம்பாங்கில் போட்டியிடக்கூடும் என்ற ஆருடம் வலுத்து வருகிறது. அந்த ஆருடத்தைப் பரப்பி வருபவர் அம்பாங் அம்னோ தொகுதித் தலைவர் இஸ்மாயில் கிஜோ.
அஸ்மின் இரண்டு தடவை கோம்பாக்கில் போட்டியிட்டு வென்று விட்டார். ஆனால், இப்போது அங்கு அவர் நிலை ஆட்டம் கண்டிருப்பதாக இஸ்மாயில் கூறினார்.
அஸ்மின் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமாவார்.
அஸ்மின் அலிக்கு தலை வணங்குகிறேன். இவரின் இந்த பேச்சு, அப்போதைய எதிர்கட்சி பீரங்கிகளான டாக்டர் டேவிட், பி.பட்டு, ஜீ .வி.காத்தையா போன்றோரை ஞாபகப்படுத்துகிறது. தற்போதைய எதிர்க்கட்சியின் வெங்காய தலைவர்கள், தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகளை தேடி ஓடுகிறார்கள். ஆனால், அன்றோ, சாதனை தலைவர் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த சாமிவேலுவை எதிர்த்து மோதினார் பி.பட்டு. தனது கோட்டை டமான்சாரா என சொல்லிக் கொண்டிருந்த டத்தோ சுப்ராவை எதிர்த்து களமிறங்கினார், டாக்டர் டேவிட். கிழக்கே சூரியன் உதிப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி நாளைய தேர்தலில் இந்த மாணிக்கவாசகத்தின் தோல்வி என கர்ஜனைகளோடு போராடியவர், ஜீ.வி.காத்தையா. கேமரன் மலையில் ம.இ.கா. தலைவர்களை எதிர்த்த சிம்மாதிரியும். மனோகரனையும் தவிர, தற்போதைய எதிர்க்கட்சியினர் பயந்தாங்கொள்ளிகள். பாரிசானின் உயர்மட்ட தலைவர்களோடு மோத லாயக்கற்றவர்கள்.
அஸ்மின் அவர்களே…உங்கள் விருப்பம் அதுவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சிலாங்கூரில் போட்டியிட்டு வென்று மீண்டும் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவதையே நாங்கள் விரும்புகிறோம். உங்கள் தலைமைத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.