பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு அன்வார் மாமன்னரின் மன்னிப்பைப் பெற வேண்டும்.
துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அன்வாரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்த மகாதிர், சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த கார்டியனுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
அன்வார் விவகாரத்தில், அவர் நியாயமற்றமுறயில் நடத்தப்பட்டார் என்று நாம் வாதிக்க முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது தெளிவானதாகும். வரப் போகும் அரசாங்கம் அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கும்படி மாமன்னரை இணங்க வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று மகாதிர் தெரிவித்தாக த கார்டியன் கூறுகிறது..
இப்படியானால், அன்வார் அரசியலில் பங்கேற்க முடியும் என்பதோடு பிரதமர் ஆகலாம். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றார் மகாதிர்.
அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில், அல்தான்துயா நஜிப் அருகில் லிம் கிட் சியாங் உட்கார்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை.
முதலில் தேர்தலில் வென்று வாங்கடா. நம்பிக்கை நாயகனின் பங்களா,இந்தோ, திருட்டு வாக்காளர்கள், அம்னோ குண்டர்கள், நாடு உருப்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லா நாதாரிகள் ஆகியோர் சிரித்துக்கொண்டு காத்திருக்கின்றனர்.
singam அவர்களே ! நமது நாட்டு அரசியல் போக்கை நன்றாகவே கதைக்கிறீர்கள் !!