கட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளுமாறு பிரதமர் நஜிப் அம்னோ பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.
“கட்சியின் போராட்டக் களத்திற்கு அழைக்கப்படும்போது நம்மிடையே எந்தவொரு தயக்கமோ, பலவீனமோ இருக்கக்கூடாது. ஒரு சிறந்த வீரராக நாம் வெளிப்படுவோம். இந்தக் கூட்டம் வெற்றிபெற என் வாழ்த்துகள்,” என தனது முகநூல் மற்றும் துவிட்டர் வலைத்தளங்கள் வழி நஜிப் நேற்றிரவு தெரிவித்திருந்தார்.
அம்னோ வட்டாரப் பிரதிநிதிகள் கூட்டம் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 26 வரை நடைபெறவுள்ளது.
மக்களின் வரிப் பணத்தை சூறையாடும் போராட்ட வீரர்களே, அம்னோவினர். இந்த போராட்டத்திலிருந்து உங்கள் வீரர்கள் சற்றும் பின் வாங்க மாட்டார்கள். பயப்படாதீர்கள்.
இந்த வீரர்கள் நம்பிக்கை நாயகனுக்கு அரணாக இருப்பார்கள்–பில்லியன் விளையாடுகிறதே– அதுதானே இவ்வளவு ஆண்டுகளாக நடக்கிறது. மூன்றாம் உலக புத்தி.