இன்னொரு கட்சி தேர்தல் நடத்தும்படி டிஎபிக்கு உத்தரவு

 

ROSordersdapடிஎபி அதன் மத்திய செயல் குழுவுக்கு ஒரு புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அக்கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

டிஎபி செப்டெம்பர் 29, 2013 இல் நடத்திய மறுதேர்தல் சட்டத்திற்கேற்ப நடத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரோஸ் தலைமை இயக்குனர் முகம்மட் ரஸின் அப்துல்லா கூறினார்.

இம்முடிவை டிஎபி ஏற்றுக்கொண்டல், அது அக்கட்சியின் தலைமையத்துவத்திற்காக 2013-2016 ஆம் ஆண்டு தவணைக்கான மூன்றாவது தேர்தலாகும்.

டிசம்பர் 15, 2012 இல் நடத்தப்பட்ட தேர்தல் முடிவு பதிவில் காணப்பட்ட ஒரு தவறைத் தொடர்ந்து அக்கட்சி தானாகவே முன்வந்து செப்டெம்பர் 29, 2013 இல் ஒரு மறுதேர்தலை நடத்தியது.

டிஎபியின் 2013-2016 ஆம் ஆண்டு தலைமைத்துவத்திற்கான தவணைக் காலம் கடந்த செப்டெம்பரில் முடிவுக்கு வந்தது. ஆனால், கட்சித் தேர்தலை 18 மாதங்களுக்கு தள்ளிப்போட கட்சியின் சட்டம் வகை செய்கிறது. எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு தயார்படுத்திக்கொள்வதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.