பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை விரட்டி விரட்டிப் பிடிப்பதைக் குடிநுழைவுத் துறை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மனித உரிமை அமைப்புகள் அதற்குப் பதிலாக தொழிலாளர்களைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு நடப்பில் உள்ள முறைமைகளை முழுமையாக திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இப்போது நடத்தப்படும் அதிரடிச் சோதனைகள் “நியாயமற்றவை” என அகதிகள் உரிமைகளுக்காக போராடும் தெனாகானிதா செயல் இயக்குனர் ஆகில் பெர்னாண்டஸ் கூறினார்.
தொழிலாளர்களைப் பதிவு செய்யாதது முதலாளிகளின் குற்றம். ஆனால், (குடிநுழைவுத்துறை) பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்து நாடு கடத்துகிறது.
“நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது முதலாளிகளின்மீது. தொழிலாளர்களைச் சாட்சிகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”, என நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சட்ட விரோதத் தொழிலாளர்களுக்குத் தற்காலிக வேலை அனுமதிகள் (இ- கார்ட்) பெற நான்குமாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இ-கார்ட் விண்ணப்ப கால அவகாசம் ஜூலை 30-இல் முடிவு வந்ததை அடுத்து குடிநுழைவுத்துறை அதன் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கியது.
இந்த அதிரடிச் சோதனைகளெல்லாம் சிறு-பெரு அன்பளிப்புக்காகத்தான். கையூட்டுப் பணமெல்லாம் இப்போது HALAL பட்டியலில் சேர்ந்துவிட்டது.
பரவாயில்லையே அறிவு இப்பதான் வேலை செய்ய ஆரம்பித்துருக்கு.
அம்னோ இளைஞர்கள் வாலை ஆட்டுவார்களே! சமாளிக்க முடியுமா?