அம்னோ தலைவர் ஒருவர், அக்கட்சி சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். தங்களுக்கே ஆர்ஓஎஸ் ஒரு முறை நெருக்கடி கொடுத்தது உண்டு என்றாரவர்.
“அம்னோ எதற்காக ஆர்ஓஎஸ் விவகாரங்களில் தலையிட வேண்டும். ஒரு முறை அம்னோவின் பதிவையே (ஆர்ஓஎஸ்) இரத்துச் செய்து விட்டது. திரும்பவும் உருவாக்க வேண்டியதாயிற்று.
“இன்று, டிஏபியும் மறு-தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதில் பயப்பட என்ன இருக்கிறது?”, என்று செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி வினவினார்.
செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அன்று அம்னோ செய்ததை இன்று டிஏபியும் செய்ய வேண்டும் என்றார்.
“ஆர்ஓஎஸ் சொல்வதைச் செய்யத்தான் வேண்டும்…… அன்று அம்னோ செய்யவில்லையா”, என்றாரவர்.