தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மக்கினுடின் ஆகியோரின் நியமனம் அப்பட்டமாக சட்டத்திற்கு முரணானது என்று வர்ணித்த மலேசியன் வழக்குரைஞகள் மன்றம், அது குறித்து விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு இன்று நடந்த அம்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் முடிவு செய்துள்ளது.என்று அதன் தலைவர் ஜோர்ஜ் வர்கிஸ் கூறுகிறார்.
அவ்விரு நீதிபதிகளும் இவ்வாண்டின் பிற்பகுதியில் 66 வருடம் ஆறு மாத வயதை எட்டியதும் கட்டாயமாக சட்டப்படி பதவியிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.
இரு பதவி ஓய்வு பெற்ற முன்னாள் மூத்த நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் உட்பட, இந்த நியமனங்களுக்கு எதிராக கருத்துரைத்துள்ளனர்.