டிஎபிக்கு நல்ல மற்றும் கெட்ட செய்திகளைத் தரும் ஹமிடி

Slide3டிஎபியின் பதிவு குறித்து தம்மிடம் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கின்றன என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

நல்ல செய்தி: மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) டிஎபியின் பதிவை இரத்து செய்யமாட்டார்.

கெட்ட செய்தி: ரோஸ் உத்தரவுப்படி, டிஎபி அதன் மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தாவிட்டால். அக்கட்சி அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.

இதற்கான காரணம், கட்சியின் அதிகாரி கட்சி வேட்பாளர்களின் நியமனப் பத்திரத்தில் இடும் கையெழுத்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று ஸாகிட் மேலும் கூறினார்.

கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகரிக்கப்படாவிட்டால், அது வெளியிட்ட நியமனக் கடிதத்தைச் சட்டப்படி செல்லக்கூடியதாக்க முடியாது என்றாரவர்.

கடந்த வெள்ளிக்கிழமை, டிஎபி அதன் மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று ரோஸ் உத்தரவிட்டிருந்தது. டிஎபி 2013 ஆம் ஆண்டில் நடத்திய தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று அது அறிவித்தது.

இதைச் சொல்வதற்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதா என்று ரோஸை, டிஎபி கடுமையாகச் சாடியது.