பக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர் ‘இடைக்கால பிரதமர்’ தேவை எனும் டாக்டர் மகாதீரின் ஆலோசனை, முக்ரிஸை அந்தப் பதவியில் அமர வைக்க, அவர் செய்யும் ஒரு ‘சதி’யாக இருக்கலாம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் கப்ராவி கூறியுள்ளார்.
அன்வார் இப்ராஹிமை விடுதலை செய்து, பிரதமர் பதவியில் அமர்த்த பக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர் இடைக்கால பிரதமர் தேவை என்பது மகாதீரின் சமீபத்திய பரிந்துரை.
“முக்ரிஸ் ‘இடைக்கால பிரதமர்’ பதவியில் அமர்ந்துவிட்டால், மகாதீரின் எண்ணப்படி, அவரின் ‘சதி’ வேலை செய்திருக்கிறது என்று அர்த்தம்.”
“முக்ரிஸ் பிரதமராகிவிட்டால், நிச்சயம் அந்தப் பதவியில் வேறொருவர் அமர மகாதீர் வழிவிட மாட்டார்; அதுவும், தனது 18 வருட அரசியல் எதிரியான அன்வார் இப்ராஹிம், பிரதமராக மகாதீர் ஒருபோதும் விரும்பமாட்டார்”, என அஸிஸ் ஓர் அறிக்கையில் இன்று கூறியிருக்கிறார்.
அஸிஸ் கப்ராவியின் அறிக்கை, சிறப்பு விவகார துறையின் (ஜாசா) புலனக்குழு ஒளிபரப்பு சேவை வழி அனுப்பப்பட்டது.
சமீபத்தில், இங்கிலாந்தின் ‘தி கார்டியன்’ உடனான நேர்காணலில், அன்வார் பிரதமராவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மகாதீர் கூறியிருந்ததைத் தொட்டு அஸிஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதிக் கட்சியின் மூத்த தலைவரான அன்வார், ‘நியாயமற்ற நிலையில் நடத்தப்பட்டு’ , அரசாங்கத்தின் தலையீடுகளினால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என மகாதீர் தனது பேட்டியில் கூறியிருந்தார்.
“அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்க, அடுத்து வரும் அரசாங்கத்தால் பேரரசரை இணங்க வைக்க முடியும் என்று நினைக்கிறேன். அதன்வழி, அன்வார் மீண்டும் அரசியலில் பிரவேசித்து, பிரதமர் பதவியில் அமர வாய்ப்புண்டு. இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என மகாதீர் கூறியிருந்தார்.
ஒரு காலகட்டத்தில், அன்வாரை ஒழுக்கக்கேடான நபர் என்றும், வெளிநாட்டு முகவர் என்றும் வர்ணித்த மகாதீர், இன்று இப்படி கூறியிருப்பது அவரிடம் குறிப்பிடத்தக்க மனமாற்றம் ஏற்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கின்றது.
மகாதீரின் இந்தத் திடீர் மனமாற்றம், மனசாட்சிக்குப் பயந்து அல்ல. மகாதீர் பிரதமராக இருந்த 80-ஆம், 90-ஆம் ஆண்டுகளில், தேசியப் பொருளகத்தின் அந்நியச் செலாவணி இழப்புகளை விசாரிக்க, அரச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்விசாரணையின் போது தன்னைத் தற்காத்துக்கொள்ள எதிர்க்கட்சியின் ஆதரவு அவருக்குத் தேவை. ஆக, எதிர்க்கட்சியின் ஆதரவைத் திரட்ட, அவர் மேற்கொள்ளும் முயற்சியே இது என்று, தாம் கருதுவதாக அஸிஸ் கருத்துரைத்துள்ளார்.
1998-ல், ஒழுக்கநெறியற்ற அன்வார் நாட்டின் பிரதமராக மட்டுமல்ல, ஒரு தலைவராகக்கூட ஆக முடியாது என்றும், 2013-ல், அன்வாருக்குப் பிரதமர் பதவி கொடுப்பது ஆபத்தானது, அவர் பிரதமரானால் நாடு நாசமாகிப்போகும் என்றும் கூறிய மகாதீர், இன்று தனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று கூறுவது தன்னைத் தற்காத்துகொள்ள, அன்வாரை ஆதரிப்பது உட்பட, எதை வேண்டுமானலும் அவர் செய்வார் என்பதையே காட்டுகிறது.
·கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம், இதுக்குத் திருக்குறளிருந்து உபமானம் சொல்ல தேவையில்லை நாம் பாட்டிகள் எவனோ \ எங்கோ எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுதுனு கூறிய உபமானங்களே போதும்,. அது மாதிரி இருக்கு அம்னோக்காரன் கூற்று.
காக்காத்திமிர் இந்தியர்களையும் சீனர்களையும் ஓரங்கட்டிய போது காக்காத்திமிரை வானுயர புகழ்ந்து அவனின் காலை நக்கிய நாதாரிகள் இன்று அவனுக்கு அளிக்கும் மரியாதை – நல்ல பாடத்தை கற்றுக்கொடுக்கிறது– இருந்தாலும் சரித்திரம் திரும்பும்- காரணம் யாரும் அல்லது பெரும்பாலோர் அந்த பாடத்தை கற்றுக்கொள்வதில்லை .