மகாதிர், அன்வார் மற்றும் கிட் சியாங் ஆகிய மூவரும் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் மக்களைத் தொடர்ந்து பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.
மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறினால், அவர்கள் பாரிசானை ஆதரிக்க வேண்டும் என்பதாகாது என்று கூறிய கைரி, நாட்டில் இன்று நிலவும் சூழ்நிலை நமக்கு வேண்டாம். இங்கு அரசியல் விரோதம், வெறுப்பு மற்றும் கிளர்ச்சி போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் செய்பவர்கள் இந்த மூன்று அரசியல்வாதிகள்தான் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னாள் அம்னோ தலைவர்களான மாகாதீரும் அன்வாரும் தங்களுடைய சுயநலன்களுக்காக மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில், கிட் சியாங் மலாய்க்காரர்களையும் சீனர்களையும் பிரிக்கிறார் என்று கைரி மேலும் கூறினார்.
இம்மூவரும் அவர்களுடைய பதவிகளை அவர்களுடைய கட்சியிலிருக்கும் இளைஞர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றாரவர்.
“இளைஞர்களாகிய எங்களுக்கு அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் போட்டியிட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்”, என்று கைரி வேண்டுகோள் விடுத்தார்.
அவர்களை விட அதிகம் மக்களை பிளவு படுத்துவது அம்னோக்காரன் தான் என்பது உமக்கு தெரியவில்லையா…
உனக்கும் உனது அம்னோ இளைஞ்ர்களுக்கும் உலக மகா திருடன் உன் தலைவன் நிஜிப்பை பதவியிலிருந்து இறக்க வற்புறுத்த உனக்கு துணிவுண்டா? மலேசிய மக்கள் மட்டும்மல்ல மலாய்க்கார்ர்களும் இரண்டு பட்டுக்கிடக்க முக்கிய காரணமே உன் தலைவனின் மெகா ஊழல் தானே. முதல் கோணல் முற்றிலும் கோணல் டா முட்டாள். உன் தலைவன் கேப்பாரினா அவன் கீழே உள்ள அரசாங்க அதிகாரி முதல் அமைச்சர் வரை எவன்டா நேர்மையா இருப்பான்.
இப்படியெல்லாம் யோசனை கூறுவதற்கு அமைச்சர் கைரி எந்த ஹொட்டலில் ரூம் போட்டு யோசித்திருப்பார் ,,,,,, ???
ஏனெனில் அந்த மூன்று பேர் இல்லாவிட்டால் இந்த நாதாறிகளுக்கு கொண்டாட்டம் தான்- கேட்க நாதி இருக்காது. அவர்கள் வைத்தது தான் சட்டம்- அவனே ராஜா அவனின் …. மந்திரி. அநியாயங்களை கண்டு சொரணை இல்லாமல் போய்விட்டது பெரும்பாலான மலேசியர்களுக்கு குறிப்பாக மலாய்க்காரன்களுக்கு. அதிலும் நம்மை எதிரிகளாகவே பார்க்கும் போது நாடு எப்படி ஒற்றுமை அடையும்?