ரபிசி : பக்காத்தான் ஹராப்பான் 50 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம்

rafizi14-வது பொதுத் தேர்தலில், தங்களால் வெல்லக்கூடிய  50 நாடாளுமன்ற இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் அடையாளங்கண்டுள்ளது.

மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் ரபிஷி ரம்லி, அவற்றுள் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பாசீர் கூடாங், தெப்ராவ், செம்புரோங், தஞ்ஞோங் பியாய், லாபிஸ், சிகாமாட், செகிஞ்சாங், பூலாய் மற்றும் ஶ்ரீ காடிங் உட்பட 15 நாடாளுமன்ற தொகுதிகளைப் பாக்காத்தான் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி சிறு பெரும்பான்மையிலேயே இத்தொகுதிகளை வென்றுள்ளது,” என்பதனையும் ரபிசி சுட்டிக்காட்டினார்.

நேற்று ஜொகூரில், ‘ஜோம், பினா செமுலா நெகாரா’ (வாருங்கள், நாட்டை மீண்டும் கட்டமைப்போம்) எனும் பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்தபின், ரபிசி செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடுதழுவிய அளவில், 22 இடங்களில், 2 மாதங்களுக்கு நடைபெறவுள்ள இப்பிரச்சாரத்தில், குறைந்தபட்ச சம்பளம், பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி.) போன்ற சிக்கல்களில் கவனம் செலுத்தப்படும்.

– பெர்னாமா