‘அரசியல்மேதை என்று அழைக்கப்படும் தகுதி மகாதிருக்கு இல்லை’

khairulநடப்பு    அரசாங்கத்தை   மக்கள்    வெறுக்க   வேண்டும்    என்பதற்காகவே     பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்மீது   ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளை   அள்ளி   வீசுகிறார்  பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  நிர்வாகத்   தலைவர்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்.

அதை   ஒரு  வெட்கக்கேடான    செயல்    என்று   சாடிய    அம்னோ   இளைஞர்   உதவித்   தலைவர்    கைருல்    அஸ்வான்   ஹருன்,  அதுவும்   மலேசியாவின்  முன்னணி    அரசியல்மேதை     என்று   போற்றப்படும்   ஒரு   முன்னாள்   பிரதமர்    அப்படிச்    செய்வது    அழகல்ல   என்றார்.

“மகாதிர்    13வது   பொதுத்    தேர்தலில்   சட்டப்பூர்வமாகவும்     ஜனநாயக   முறைப்படியும்    தேர்ந்தெடுக்கப்பட்ட    பிரதமரைச்   சிறுமைப்படுத்தும்   முயற்சியில்   ஈடுபட்டிருக்கிறார்.

“டத்தோஸ்ரீ   நஜிப்   அப்துல்   ரசாக்கைச்   சிறுமைப்படுத்த  முயலும்   மகாதிரின்    செயல்கள்   அவர்   அரசியல்மேதை   என்று   அழைக்கப்படுவதற்குத்   தகுதியற்றவர்   என்பதை    நிரூபிக்கின்றன”,  என்றாரவர்.

மகாதிர்   தம்  காலம்   முடிந்து  விட்டதை   உணர்ந்து   வாயைப்  பொத்திக்கொண்டு  இருக்க    வேண்டும்    என்பதே   அம்னோ   இளைஞர்களின்   விருப்பமாகும்   என   கைருல்   அஸ்வான்   கூறினார்.