நாட்டு நடப்பில் ஏமாற்றமும் வெறுப்பும் கொள்வதாகக் கூறும் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் அறிக்கை சரவாக்கில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“துங்கு மக்கோத்தா ஜோகூர் (டிஎம்ஜே) சரியான காரியத்தைத்தான் செய்துள்ளார், உண்மை என்று தாம் நினைப்பதை எடுத்துரைத்திருக்கிறார். தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தம் மனத்துக்குப் பட்டதை வெளிப்படையாக எடுத்துரைக்கும் துணிச்சல் கொண்டவர் அவர்”, என சரவாக் துணை முதலமைச்சர் (டிசிஎம்) ஜேம்ஸ் மாசிங் கூறினார்.
மக்களுக்கு ஆதரவாக பேசும் டிஎம்ஜேயின் விவேகத்தையும் துணிச்சலையும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் தலைமையை இப்படிக் குறைகூறுவது சாதாரணமாக நிகழக்கூடியது அல்ல. அந்த வகையில் டிஎம்ஜே ஓர் அதிசய ஆட்சியாளர்.
“அவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதற்காக அவரை யாரும் குறைசொல்ல முடியாது”, என மாசிங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
துங்கு இஸ்மாயில் ஆகக் கடைசியாக ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவில் நாட்டைப் பிடித்தாட்டும் பிரச்னைகளைச் சொல்லி வருத்தப்பட்டிருந்தார். “நான் போற்றிப்பாராட்டிய நாட்டுக்கு என்ன நடக்கிறது? என் தாயகம் என்று நான் பெருமையுடன் அழைத்த நாடல்லவா இது”.
மற்றவற்றோடு, மலேசியாவில் ஊழல் ஒரு மரபாகிவிட்டது என்றும் அந்த ஊழல் செய்வோரை ஊடகங்கள் பாதுகாக்கின்றன என்றும் ஜோகூர் பட்டத்திளவரசர் குறிப்பிட்டிருந்தார்.
இருக்கின்ற வாய்ப்பைக் கொண்டு ஏதாவது செய்ய முடியுமா பாருங்களேன்!
போடா வெங்காயம்- உன்னைக்கூட ஒரு காலத்தில் மதித்தேன் ஆனால் நீயும் விலை போனவன்தானே. ஜோஹோர் அரசுதான் மலேசியாவிலேயே பணக்கார அரச குடும்பம். அவர்கள் அம்னோ எலும்புக்கு கை ஏந்துவதில்லை. அதிலும் தற்போதைய ஆட்சியருக்கு பிரிட்டிஷ் வெள்ளைக்கார இரத்தம் ஓடுகிறது.இன்னும் கூற வேண்டுமா?