பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய விமான நிறுவனம் எதிர்நோக்கும் பல தொல்லைகளுக்கும் தமக்கு முன் இருந்த ஒருவரின் “விபரீத முடிவுகள்தாம்” காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
செப்பாங்கில் நடைபெற்ற மலேசிய விமான நிறுவனத்தின் ஹரி ராயா கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் அந்த விமான நிறுவனம் பல “சிரமமான காலக்கட்டங்களை”க் கடந்து வந்திருப்பதாகக் கூறினார்.
“எம்ஏஎஸ்ஸின் வரலாறு நெடுகிலும் விபரீத முடிவுகள் நிறைந்திருக்கின்றன என்பேன்.
“அதையெல்லாம் நினைவுகூறப்போவதில்லை. எம்ஏஎஸ் தொல்லைகள் எல்லாம் எனக்கு முன் இருந்த ஒருவரின் கைங்கரியம்.
“ஆனால், அதைச் சரிசெய்வேன். ஏம்ஏஎஸ் மீண்டெழுந்து உலகின் தலையாய விமான நிறுவனமாக விளங்குவதை உறுதிப்படுத்துவேன்”, என்று நஜிப் கூறக் கூட்டத்தினர் உற்சாகமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கிணற்றை வெட்ட வெட்ட நிறைய பூதங்கள் வெளிவரவிருக்கின்றன ! யாவும் மக்களின் வரிப்பணத்தை ஏப்பம் விட்டனவை . அவற்றை சரிசெய்ய இப்போது மக்களிடமிருந்து பலவகையில் பணம் சுரண்டப்படுகிறது .
இவர் அவரை ஊழல் பேர்வழி என்பதும் , அவர் இவரை ஊழல் பேர்வழி என்பதும் காலம் காலமாய் எல்லா அரசியல்வாதிகளும்
கையாளும் போர்முறைதானே !!!
அரண்டவன் கண்ணுக்கு காண்பதெல்லாம் வேறு எப்படி இருக்கும்?
MAS -நாறிப்போனதற்கு இவனின் இனமே முக்கிய காரணம்– தரம் இல்லா தகுதி இல்லா தலைமைத்துவம்.எதிலும் அம்னோ தலை ஈடு – சாதிப்பவர்களுக்கு உயர்வு கிடையாது. அறை வேக்காடுகள் எப்படி சாதிக்க முடியும்? 1978 க்கு முன் இருந்த நிலை வேறு. காக்காத்திமிர் அதிகாரத்தில் இருந்தபோதே (அமைச்சராக) இவனின் தலையிட்டில் எல்லாமே மலாய்க்காரன் மயமாக்கப்பட்டது. ஜமாலி சதாத் என்ற மலாய் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர்மலாய்க்காரன்களை கிண்டல் பண்ணியதால் விளைவு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டான்.அடிவருடிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கிறான்கள்