அன்வார் கேட்கிறார்: தலைமை நீதிபதியின் பதவி நீட்டிப்பில் ஷாபி சம்பந்தப்பட்டுள்ளாரா?,

 

IsShafieinvolvedதலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி சுல்கெப்லி அஹமட் மாகினுடின் ஆகியோரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்ட விவகாரத்தில் பிரபல்ய வழக்குரைஞர் முகம்மட் ஷாபி சம்பந்தப்பட்டுள்ளாரா என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நஜிப் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.

ராவுஸ் மற்றும் சுல்கிப்ளி ஆகியோரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான சட்டக் கருத்துகள் மற்றும் அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முடிவு செய்வதற்கான அடிப்படை ஆகியவற்றை தயாரிப்பதில் ஷாபி சம்பந்தப்பட்டிருப்பதாக தமக்கு தெரிய வந்துள்ளது என்று அன்வார் கூறுகிறார்.

இதன் காரணமாக, இது உண்மையா அல்லது இல்லையா என்பதை நஜிப் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது உண்மையானால், இதனை வெளிப்படையாக பொதுமக்களுக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று அன்வார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

இது ஒரு முக்கியமான விவகாரம், ஏனென்றால் இது சுயேட்சையான நீதித்துறைக்கான மக்களின் உரிமை சம்பந்தப்பட்டது என்று அன்வார் வலியுறுத்தினார்.