தலைமை நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப்பும் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மகினுடினும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டது அரசமைப்புக்கு முரணானது என்று நினைப்போர் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாமே என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான்.
“நடப்புச் சட்டங்கள் அதற்கு இடமளிக்கின்றன”, என்றாரவர்.
அந்நியமனம் கூட்டரசு அரசமைப்பின் பகுதி 122(1ஏ)-க்கு இணங்க செய்யப்பட்டிருப்பதாக அதைத் தற்காத்துப் பேசினார் அஸலினா.
“தலைமை நீதிபதியுடன் ஆலோசனை கலந்து கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய பேரரசருக்குத் தனி அதிகாரம் உண்டு என்பதை அச்சட்டவிதி தெளிவாகக் குறிப்பிடுகிறது”, என்றவர் வலியுறுத்தினார்.
சட்டம் ஒர் இருடட்றை என்பது இவருக்கும் தெரியும் போலிருக்கு!
வழக்கு தொடுத்து என்ன தீர்ப்பு வரும்? ஏண்டி – என்றைக்கு நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது கடந்த 8 ஆண்டுகளில்? நீதி நியாயம் இருந்தால் நம்பிக்கை நாயகனும் அவனுடைய குஞ்சுகளும் கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அவன்தானே இந்த நாட்டின் முதல் நீதிபதி.