சுமத்ராவில் நில நடுக்கம்: சிலாங்கூரில் நில அதிர்வு உணரப்பட்டது

quakeஇன்று,       வட    சுமத்ராவை   ரிக்டர்  கருவியில்  5.9   என்று  பதிவான   மிதமான   நில   நடுக்கம்  ஒன்று   தாக்கியதாக   வானிலை   ஆய்வு  மையம்   அறிவித்தது.

காலை  மணி   9.24க்கு   அந்நிலநடுக்கம்   நிகழ்ந்தது.

அதன்  விளைவாக   சிலாங்கூரின்   சில   பகுதிகளில்    நில   அதிர்வுகளை   உணர  முடிந்ததாக    அது   ஓர்   அறிக்கையில்  குறிப்பிட்டது.  ஆனால்,  சுனாமி   அபாயம்   குறித்த    அறிவிப்பு   எதுவும்   விடுக்கப்படவில்லை.

இதனிடையே,  ஜப்பானில்,   அதன்   தெற்குப்  பகுதியில்   உள்ள   கியுஷு   தீவை   5.2  சக்தி   கொண்ட   நில   நடுக்கம்  ஒன்று  தாக்கியதாக   தோக்கியோ   வானிலை   ஆய்வு  மையம்   கூறிற்று.   உள்ளூர்  நேரம்  காலை   11:56 (ஜிஎம்டி 0256)க்கு  அந்த  நில  நடுக்கம்   தாக்கியது.