டிஏபி செயலவை தேர்தலைத் தாமதப்படுத்தவில்லை, ஆர்ஓஎஸ் அறிவிக்கை இன்னும் வரவில்லை

dapடிஏபி  அதன்   மத்திய   செயலவைத்   தேர்தலை    வேண்டுமென்றே   தாமதப்படுத்துவதாக   அபாண்டமாக  பழி  சுமத்துகிறார்கள்   என்று  கூறும்  அக்கட்சியின்   தேசிய   சட்டப்   பிரிவுத்   தலைவர்    கோபிந்த்   சிங்  டியோ,  சங்கப்  பதிவகத்திடமிருந்து  அதிகாரப்பூர்வ    அறிவிக்கை    எதுவும்   இன்னும்   கிடைக்கப்  பெறவில்லை   என்றார்.

“இன்று  காலை   10 மணிவரை    எதுவும்   எங்களுக்கு  வந்துசேரவில்லை.

“ஆர்ஓஎஸ்  கடந்த   வெள்ளிக்கிழமை   பத்திரிகை   அறிக்கை   ஒன்றை   வெளியிட்டிருந்தது. அதன்மீது   வார  இறுதி  தொடங்கி    இதுவரை    பொதுவில்   விவாதிக்கப்படுகிறது”,  என  பூச்சோங்   எம்பியுமான   கோபிந்த்   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

மறுதேர்தல்   நடத்துவதை   டிஏபி   தாமதப்படுத்துவதாகக்  கூறப்படுவதை   மறுத்த    அவர்,  ஆர்ஓஎஸ்தான்   கட்சியுடன்   தொடர்புகொண்டு   சொல்ல   வேண்டியதைச்   சொல்லாமல்   தாமதப்படுத்தி    வருகிறது  என்றார்.

ஆர்ஓஎஸ்    தாமதப்படுத்துவது  டிஏபியின்   14வது    பொதுத்   தேர்தலுக்கான    ஆயத்தப்பணிகளையும்  பாதிக்கும்   என்பதை   கோபிந்த்   சுட்டிக்காட்டினார்.