அதன் கோட்டைகளாக விளங்கும் பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் “மலாய் சுனாமி”யின் தாக்கத்தை அம்னோவால் தாக்குப் பிடிக்க முடியாது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின்.
அம்னோ தொகுதிகளின் ஆண்டுக் கூட்டங்களில் அதன் மூத்த தலைவர்கள் தம்மீதும் பெர்சத்து மீதும் தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது என்று குறிப்பிட்ட முகைதின், இது அவர்கள் உள்ளுக்குள் கலக்கமடைந்திருப்பதைக் காண்பிக்கிறது என்றார்.
“மலாய்க்காரர்களிடையே அம்னோவிடம் நம்பிக்கை விரைவாக குறைந்து வருகிறது.
“மலாய்க்க்காரர்களின் இந்த அவநம்பிக்கை 14வது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமியாக உருமாறி அதன் விளைவாக அரசாங்க மாற்றம் நிகழப் போகிறது”, என்று முகைதின் கூறினார். அவர், ஜோகூரை அடுத்து அம்னோவின் பெருங் கோட்டையாகக் கருதப்படும் மலாக்காவில் பெர்சத்துவின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதைச் சுட்டிக்காட்டினார்.
கூடிய சீக்கிரத்தில் ‘டைடானிக்’ மூழ்கப் போகிறது.