அமைச்சர்: தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்துவதில் வேறுபாடு உண்டு

sallehநாட்டின்   தடுப்புச்   சட்டங்கள்   எல்லாக்  காலங்களிலும்    ஒரே   மாதிரியாக    பயன்படுத்தப்படவில்லை     என்பதை     அம்னோ    அமைச்சர்    ஒருவர்    கவனப்படுத்தினார்.     வெவ்வேறு   பிரதமர்களின்   ஆட்சியில்    வெவ்வேறு  விதமாக   அவை   பயன்படுத்தப்பட்டு    வந்துள்ளன.

1980-களிலும்    1990-களிலும்   அரசாங்கத்தின்   அதிகாரத்தை   நிலைநிறுத்திக்கொள்ளவே   உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்டம்  (ஐஎஸ்ஏ) பயன்படுத்தப்ப்பட்டது  என   சாலே   சைட்    கெருவாக்   தம்   வலைப்பதிவில்   கூறியிருந்தார்.

நடப்பு    அரசாங்கத்திலும்   தடுப்புச்   சட்டங்கள்   உண்டு.  ஆனால்,  இவை    தேசிய   பாதுகாப்பு   விவகாரங்களுக்கு   மட்டுமே   பயன்படுத்தப்படுகின்றன.

“பல   தரப்புகள்   நடப்பு   அரசாங்கத்தைக்   குறைகூறுகின்றன. இது   ஜனநாயகமற்ற    நாடு    என்று   குற்றஞ்சாட்டும்    அவை  2012   பாதுகாப்புச் சட்டங்கள் (சோஸ்மா),  பயங்கரவாதத்    தடுப்புச்   சட்டம் (பொடா),   தேசிய   பாதுகாப்பு   மன்றச்  சட்டம்   ஆகியவையே   அதற்குச்   சான்று     என்றும்   சுட்டிக்காட்டுகின்றன”,  என்றாரவர்.

இவை   திரித்துக்  கூறப்படும்  குற்றச்சாட்டுகளாகும்     என்று   குறிப்பிட்ட   சாலே,   தேசிய   பாதுகாப்பை   உறுதிப்படுத்த   உருவாக்கப்பட்ட    சட்டங்கள்  இவை    என்றார்.

“உலகம்  முழுவதும்,   ஜனநாயக    நாடுகளிலும்,   கம்முனிஸ்டு   நாடுகளிலும்   அவை   பயன்படுத்தப்படுகின்றன”,  என்றாரவர்.

“கடந்த   காலங்களிலும்    தடுப்புச்   சட்டங்கள்   பயன்படுத்தப்பட்டது   உண்டு.  குறிப்பாக   ஐஎஸ்ஏ   1985-இல்  மெமாலி   சம்பவத்திலும்,   1987-இல்   ஒப்ஸ்  லாலாங்   நடவடிக்கையின்போதும்,   1998-இல்,   அன்வாருக்கு   எதிராகவும்  பயன்படுத்தப்பட்டது.

“அப்போது   அரசாங்கம்    ஆட்சியதிகாரத்தை  நிலைநிறுத்திக்கொள்வதற்காக    ஐஎஸ்ஏ-யைப்   பயன்படுத்தியது.  ஆனால்,  இப்போது    தேசிய   பாதுகாப்புக்காக   (புதிய)   சட்டங்கள்   பயன்படுத்தப்படுகின்றன”,  என்று   சாலே  கூறினார்.