நீதிபதிகள் நியமனத்தைத் தற்காக்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின்

 

oldcjokதலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு தலைவர் சுல்கிப்ளி அஹமட் மாக்கினுடின் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதித்துறை நியமன நடைமுறை பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கேற்ப செய்யப்பட்டதாகும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா இன்று கூறினார்.

பேரரசரிடம் அவர்களின் நியமனத்திற்கான பரிந்துரையை தாம் மார்ச் 30 இல் செய்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

“அது பதிவில் இருக்கிறது. அதை நான் கூற முடியும்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ராவுஸ் மற்றும் சுல்கிளி ஆகியோரின் நியமனம் குறித்து தெரிவிக்கப்பட்ட பல கருத்துகளுக்கு, ஒரு முன்னாள் நீதிபதி மற்றும் மலேசியன் வழக்குரைஞர்கள் மன்றம் தெரிவித்திருந்த கருத்துகள் உட்பட, அரிப்பின் எதிர்வினையாற்றினார்.

நீதிபதிகளின் நியமனம் பற்றிய சர்ச்சையில் அவர் இழுக்கப்பட்டுள்ளார், ஏனென்றால் அவர் மார்ச் 30 இல் பேரரசருக்கு அவர்களின் நியமனத்தை பரிந்துரை செய்துள்ளார். அரசாங்கம் அந்த நியமனங்களை கடந்த வாரம்தான் அறிவித்தது.

எனினும், அவர் மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் இப்போது தகராறில் இருக்கிறது. இப்போது இது குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல என்று கூறிய அரிப்பின், இவ்விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்லப் போகிறது. ஆகவே, தாம் கருத்துரைப்பது சரியல்ல என்று மேலும் கூறினார்.