“கட்டாயப்படுத்தப்பட்டால்” டிஎபி கட்சி தேர்தலை நடத்தும்

 

Dapokforelectionமன்றங்கள் பதிவகம் (ரோஸ்) கட்டாயப்படுத்தினால், டிஎபி கட்சி தேர்தலை புதிதாக நடத்தும் சாத்தியத்தை இரு மூத்த டிஎபி தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

டிஎபி தேசிய உதவித் தலைவர் தெரசா கோ, “நாங்கள் மறு தேர்தல் நடத்த மாட்டோம் என்று சொல்லவில்லையே.

‘நாங்கள் கத்தியின் முனையில் நிற்கிறோம். நாங்கள் அரசாங்கம் அல்ல. அவர்கள் (ரோஸ்) கட்சியின் பதிவை இரத்து செய்துவிட்டால், அது நிலைமையை மோசமாக்காதா?”, என்று தொடர்பு கொண்டபோது அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஜூலை 7 இல், ரோஸ், டிஎபி புதிய கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 2013 ஆம் ஆண்டில், டிஎபி நடத்திய தேர்தல் செல்லாது என்று அது அறிவித்தது.

எனினும், கட்சியின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்குமுன், ரோஸிடமிருந்து அதிகாரப்பூர்வமான கடிதத்தைப் பெற வேண்டும் என்று தெரிவித்த தெரசா, அவர்கள் (ரோஸ்) எவ்வளவு தொந்தரவுகள் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பது புரியவில்லை என்று மேலும் கூறினார்.

48 மணி நேர அவகாசம்

டிஎபி தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிக்கை விட்ட ரோஸ், இன்னும் அதிகாரப்பூர்வமான கடிதத்தை அனுப்பவில்லை.

நேற்று, கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந்த சிங் டியோ தங்களுக்கு அத்தகைய கடிதத்தை அனுப்ப வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று ரோஸுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்தார்.
புவா: எதுவும் நிராகரிக்கப்படவில்லை

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, இரண்டாவது கட்சித் தேர்தல் நடத்தப்படும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்றார்.

தெரிசா கூறியதைப் போல், ரோஸிடமிருந்து அதிகாரப்பூர்வமான கடிதம் கிடைத்த பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
தெரசா மற்றும் டோனி ஆகியோர் தெரிவித்த கருத்து கட்சி “இரண்டாவது மறுதேர்தலை நடத்த அஞ்சவில்லை”, என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருந்த கருத்தைப் பிரதிபலிக்கிறது.