மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பெர்லிஸ் இஸ்லாமிய சமய, மலாய் பழக்கவழக்க மன்றம் (மைப்ஸ்) அளிக்கும் உதவிகளை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது.
ஜாக்கிம் தலைமை இயக்குனர் ஒத்மான் முஸ்தபா, மதம் மாறியவர்கள் கல்வியைத் தொடர உதவும் மைப்ஸின் மேலான முயற்சிகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றார்.
“இதுவரை எந்த நிறுவனமும் மதம் மாறியவர்களுக்கு இதுபோல் உதவிச் சம்பளம் வழங்க முன்வந்ததில்லை. எனவே, ஜாக்கிம் இந்த உதவிச் சம்பளத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும்”, என நேற்றிரவு கங்காரில் மதம் மாறியவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மதம் மாற்றுவதற்கு நல்ல திட்டம்!
மதமும் இப்போது வியாபார பொருளாகி விட்டது !! ஒரு அட்டவணை வைத்தால் கொமிசன் கிடைத்தால் இது நல்ல ஒரு வியாபாரமாக தெரிகிறது !!
எனக்கு தெரிந்தவரையில் உலகத்தில் இரு மதம் மட்டுமே இவ்வாறான
அனறிகச்செயலை செய்து தன் மதத்திற்கு ஆள்சேர்ப்பதை கொள்கையாக கொண்டுள்ளது , தற்போது இன்னும் தாழ்வாக கீழ் இறங்கி ஆள்சேர்ப்பதில் மும்முரம் காட்டுவதில் முதல்மையாக விளங்குகிறது இந்த அமைப்பு ??? இன்னும் வரும் காலங்களில் மார்க்கெட்டுகளில் ( வியாபார சந்தைகளில் ) கூவி கூவி ஆள்சேர்த்தாலும் வியப்பேதுமில்லை .
1. ஜாக்கீமிற்கு ஒதுக்கப் படும் பணம் மக்கள் வரிப் பணம்தானே!. அரசுப் பணம் மீண்டும் மக்களுக்கேப் போய்தான் சேர வேண்டும். இவர்கள் ஒதுக்கப் படும் இந்த வரிப் பணத்தை உதவிகளென்றப் பேரில் நாளைத் தவறாக மத மாற்றத்தை மற்றவர்களிடம் ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துவார்கள் போல் தெரிகின்றதே! மேலும் இந்த நோக்கத்திற்காக அரசிடம் மேலும் அதிக நிதிக் கோரவும் நிறைய வாய்ப்புள்ளது. இது நல்ல அணுகுமுறையில்லை!. மலேஷியா நாட்டில் சுதந்திரமான வழிப் பாடுகள் மக்களெல்லோருக்கும் பொது. 2. இவர்களாவது மதம் மாறுவோறுவோர்க்கு உதவிச் சம்பளம், கல்வி உதவிநிதியென்றுச் சொல்கின்றார்ர்கள். பொதுவாக நம்மக் கோயில்களில் என்னடாவென்றால், நம் மக்களுக்கு இப்படி ஏதாவ்து சின்னஞ் சிறிய உதவிகளாவதுக் கொஞ்சமாவதுக் கிடைக்கின்றதா? அறங்காவலர்களென்றப் பேரில் கொள்ளையடிக்கும் கூட்டங்களாக இருக்கின்றார்களே! 3. மோசமான ஏழ்மை நிலையிலுள்ள பலக் குடும்பங்களை பார்க்கின்றோம்; தகவல் சாதனங்களின் மூலம் அறிகின்றோம். ஏன் கோயில்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் வரவில்லை; மக்கள்தானே கோயில் உண்டியல்களை நிரப்புகின்றார்கள்; இருந்தும் ஏன் இன்று நமக்கு இந்த அவளை நிலை? மற்றவர்கள் அவர்களுக்கு உதவிச் செய்ய முன்வரும் போது, அவர்களை மதம் மாறச் சொல்லி தூண்டி அவர்களின் சுயமரியாதையும் அவர்கள் விலைப் பேசுவதில் தவறேதுமில்லையே! அதுதான் இப்போது நடந்து வருகின்றது! இனிமேலாவது நாம் மாறுவோமா?
இஸ்லாம் நல்ல மதம். ஆனால் நம் நாட்டில் அதை வியாபார பொருளாக்கி விட்டார்களே என் நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது .
Palanisamy T , அருமையான கருத்து.
கோயில்களில் குருட்டுக் களவாணிகள் பங்கு போட்டுக் கொள்வதில் பொது மக்கள் பங்கு கேட்டால் நியாயமா? அவர்களுக்கிடையே பங்கு போட்டுக் கொள்வதும், ஆடம்பர அவசியமற்ற கிரியையைகளைச் செய்வதும் அதன்வழி பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர் நோக்கம். மக்களை வாழ வைப்பது அவர் நோக்கமல்ல.
நல்லதொரு திட்டம் என்றாலும் வேறொரு உதவியையும் ஜாக்கிம் செய்ய வேண்டும். கணவன் மனைவியராக இருந்தால் ஒவ்வொருக்கும் மாதம் கணவருக்கு 5000 மனைவிக்கு 5000 என்று சம்பளம் கொடுக்க வேண்டும். மதம் மாறி இஸ்லாத்துக்கு பெருமை சேர்க்கும் இவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுப்பதில் தவறில்லையே!
அந்த உதவி சம்பளம் யாருடை பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது? முஸ்லீம் அல்லாதவரின் வரிப்பணத்தில் இருந்து எப்படி கொடுக்க முடியும்? அது ஹராமாயிற்றே?
இஸ்லாம் மதத்தை வியாபார பொருளாக ஆக்கி விட்டு, தற்போது
இஸ்லாத்தை கேலிக்குரிய பொருளாக ஆக்க துடிக்கும் ஜாக்கிமின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மதம் மாற்ற கையூட்டா? சலட் இது ஹராம் அல்லவா
?