பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கத்தை ஈவிரக்கமற்றது என்று சித்தரிக்கும் எதிரணியினரைக் கடிந்து கொண்டார்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களைப் புறக்கணிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய பிரதமர், எதிரணி உண்மையைச் சொல்வதில்லை என்றார்.
“ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் எதிரணி வசமுள்ள மாநிலங்கள் உள்பட எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்கிறது.
“ஆண்டுக்கு ஆண்டு இந்த ஒதுக்கீடுகள் அதிகரித்து வருகின்றன”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறியிருந்தார்.
பாஸ் ஆட்சியில் உள்ள கிளந்தானுக்கு 2011-இலிருந்து 2015வரை ரிம1.94 பில்லியன் கொடுக்கப்பட்டது.
அதே காலக்கட்டத்தில் டிஏபியின் ஆட்சியில் உள்ள பினாங்குக்கு ரிம950 மில்லியன் கொடுக்கப்பட்டது.
பிகேஆர் வசமுள்ள சிலாங்கூருக்கு ரிம3.63 பில்லியன்.
“இவை தவிர அம்மாநிலங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், கட்டுப்படி விலை வீடுகள், போலீஸ் நிலையங்கள் முதலியவை கட்ட கூட்டரசு அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகிறது”.
எனவே, எதிரணித் தலைவர்கள் ஆதாரமின்றி அரசாங்கம்மீது குற்றம் சாட்டக்கூடாது என்று நஜிப் குறிப்பிட்டார்.
பினாங்கு தீவிலுள்ள பெரிய மருத்துவமனை சீர்படுத்தாத நிலையில் உள்ளதே அதற்கு என்ன காரணம்?
நம்பிக்கை நாயகனுக்கு அதிகார வெறி தலைக்குமேல். என்ன செய்வது அதிகாரம் தலைக்கு எரிய பல தலைகள் இந்த உலகில் மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கி சுகபோகத்துடன் காலம் கடத்துகின்றனர். மூன்றாம் உலகம் மூன்றாம் உலகம் தான். சில நாடுகள் முதலாம் உலகம் ஆனால் மூன்றாம் உலக புத்தி.