இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ Slide3எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது.

இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ.சிவராஜன் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாண்டு 2017/2019 ஆண்டுகளுக்கான கட்சியின் உள்தேர்தலும் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

கட்சி தோற்றம் கண்ட 1998-ஆம் ஆண்டு முதல், டாக்டர் முகமட் நசீர் ஹசீம் தேசியத் தலைவராகவும், சரஸ்வதி முத்து தேசியத் துணைத் தலைவராகவும் இருந்து வருவது இங்குக் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஈராண்டுகளுக்கு அவர்களேத் தொடர்ந்து இருப்பார்களா? இல்லை, தலைமைத்துவ மாற்றங்கள் ஏதும் நிகழுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடக்கம் ஜூலை 16 வரை, 3 நாட்களுக்கு சிரம்பானில் பி.எஸ்.எம். மாநாடு நடைபெறவிருக்கிறது.