எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில், 8 நாடாளுமன்ற தொகுதிகள் , 16 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) முடிவெடுத்துள்ளது.
இன்று, சிரம்பானில் நடந்த, கட்சியின் 19-வது மாநாட்டின் தொடக்க விழாவில், பி.எஸ்.எம். தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் நசீர், மு.சரஸ்வதி, அருட்செல்வன் இவர்களோடு 20 புதிய முகங்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க தயாராகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாங்கள் போட்டியிடவிருக்கும் தொகுதிகளையும் கட்சி உறுப்பினர்களின் பலத்த ஆரவாரங்களுக்கிடையே பின்வருமாறு அது அறிவித்தது :-
மாநிலம் | நாடாளுமன்றத் தொகுதிகள் | சட்டமன்றத் தொகுதிகள் |
பேராக் | சுங்கை சிப்புட், பத்து காஜா | ஜெலாப்பாங், மஞ்சோய், புந்தோங், மாலிம் மாவார், துரோனோ, மெங்கிலம்பூ, |
பஹாங் | கேமரன் மலை | ஜெலாய் |
சிலாங்கூர் | உலு லங்காட், உலு சிலாங்கூர், சுபாங் | செமிஞ்சே, ஶ்ரீ முடா, காஜாங், போர்ட் கிள்ளான், கோத்தா டாமான்சாரா, |
கோலாலம்பூர் | கெப்போங் | – |
ஜொகூர் | – | நூசா ஜெயா |
நெகிரி செம்பிலான் | – | நீலாய் |
கிளாந்தான் | – | கோத்த லாமா, காலாஸ் |
சபா | தாவாவ் | – |
தலைமைச் செயலாளர் ஆ.சிவராஜன், கேமரன் மலை சுரேஸ், ‘லிசன்’ கே.எஸ். பவானி, இவர்களோடு கட்சி தோற்றுநர்களில் சிலர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பூர்வக்குடி மக்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்போடு, பி.எஸ்.எம்.-ன் தேர்தல் வேட்பாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் கைச் சின்னத்திலேயே நிற்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
PSM கட்சி,எதிர்வரும் பொதுத்தேர்தலில் 17 நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் DAP, PKR, AMANAH, ஆகிய கட்சிகளை எதிர்த்து போட்டியிடுகிறது. உடம்பு புல்லரிக்கிறது போங்க. உளு லங்காட்(நாடாளுமன்றம்) மற்றும் செமேன்யி, கோத்தா டமான்சாரா, மன்ஜோய்,நுசா ஜெயா, ஆகிய சட்டமன்றங்களில் அமனோவை எதிர்த்து போட்டிப் போடப்போவதாக கூறுகிறீர்களே, அம்னோ உங்களை கோபித்துக் கொள்ளாதா?