கிளந்தானில் பிரம்படி வெற்றி பெற்றால், பகாங் பின்பற்றக்கூடும்

Pahangமுஸ்லிம் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் பிரம்படி கொடுப்பது கிளந்தானில் வெற்றி பெற்றால், பகாங் மாநிலம் அதை அமல்படுத்துவது பற்றி சிந்திக்கும் என்று பகாங் முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் கூறுகிறார்.

கிளந்தான் சட்டமன்றத்தில் ஷரியா கிரிமினல் சட்டம் 2002 ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றி கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இது பற்றி விவாதிப்போம். கிளந்தானில் அது வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அமல்படுத்தலாம் (பகாங்கில்) என்று அவர் மேலும் கூறினார்.

அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்கள் சூதாடுவதை நிறுத்தி அவர்களை நல்லவர்களாக்கும் என்றால் செய்யலாம் என்று அவர் தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.