சிங்கப்பூர் சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்ட எஸ்.பிரபாகரனின் படமொன்று இப்போது வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
சிறையில் கடைசியாக பிடிக்கப்பட்ட இப்படத்தை துக்குத்தண்டனையை எதிர்க்கும் என்ஜிஓ-வான We Believe in Second Chances (இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதை விரும்புகிறோம்) அமைப்பு பதிவேற்றம் செய்துள்ளது.
பிரபாகரன் நேற்றுக் காலை தூக்கிலிடப்பட்டார்.
“அவரின் குடும்பத்தார் கடைசியாக நேரத்தில் சிறையில் பிடிக்கப்பட்ட படங்களையும் அவரின் இறுதிச் சடங்குப் படங்களையும் இணையத்தின்வழி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள்”, என அந்த என்ஜிஓ முகநூலில் கூறியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை வணங்குகிறேன் .
இப்பேர்ப்பட்ட தியாகிகளுக்கு நல்ல விளம்பரம் கொடுங்கள்.
பொதைப்பொருளை ஒருவர் கையில் வைத்திருக்கும்போதோ அல்லது விநியோகம் செய்யும்போதோ பிடிபட்டிருந்தால் அவர் சம்மந்தப்பட்டிருந்ததை நிருபித்து தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ஆட்சேபனை இல்லை. மற்றபடி ஒருவரின் வாகனத்தில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதை மட்டும் சாட்சியாகக் கொண்டு ஒருவருக்கு இந்த தண்டனையை விதிப்பது காட்டுமிராண்டித் தனத்துக்கு ஒப்பானது. வெறும் சாட்சிகளையும் சூழ்நிலையையும் வைத்து நீதி செத்துப்போக அரசு சார்பு வக்கீலும் நீதிபதிகளும் துணை போகக்கூடாது. இது போன்ற காட்டுமிராண்டி சட்டங்களை நீக்க ஐ.நா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரனைத் தூக்கிலிருந்து காப்பாற்ற கையெழுத்து வேட்டை நடத்தக் கூட மனித உரிமைக்காக போராடுவதாகச் சொல்லிகொண்டு தொண்டை கிழிய கத்தும் எவனும் முன்வரவில்லையே…
குமார ராஜா, அருமையாக கருத்து. அதற்கு இங்கே மதிப்பு இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம். கலியுகத்தில் உண்மை ஊமை. பார்க்கவும் கேட்கவும் தான் முடியும்.