எம்ஏசிசி: ஊழல்-எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள பினாங்கு மறுப்பது வருத்தமளிக்கிறது

maccஊழலை     நாட்டின்   முதல்நிலை     எதிரியாக்கி      அதற்கெதிராக    போராடுவதற்கு    வகை      செய்யும்     ஊழல்-எதிர்ப்பு  உறுதிமொழி  ஆவணத்தில்   கையெழுத்திட    பினாங்கு  மாநிலம்  மறுப்பது   மலேசிய   ஊழல் தடுப்பு     ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு    எரிச்சலூட்டுகிறது.

மற்ற   மாநிலங்கள்    அதில்   கையெழுத்திட்டு    விட்டன. கிளந்தானும்   சிலாங்கூரும்கூட   கையெழுத்திட   தயாராகவுள்ளன  என   எம்ஏசிசி     தலைமை   ஆணையர்    சுல்கிப்ளி  அஹமட்   கூறினார்.

“கையெழுத்திடும்படி    பினாங்கைக்   கட்டாயப்படுத்த   முடியாது. பொறுத்திருந்துதான்   பார்க்க    வேண்டும்.  பினாங்கில்   ஊழல்  தொடர்பாக   நிறைய   புகார்கள்    வள்ளன”,  என்றாரவர். சுல்கிப்ளி   நேற்றிரவு   பூலாவ்    கித்தாமில்   சீனர்   சமூகத்தினருடன்   ஹரி  ராயா  உபசரிப்பு  ஒன்றில்   கலந்து   கொண்டார்.

எம்ஏசிசியின்    ஊழல்-எதிர்ப்பு    உறுதிமொழியைவிட    2008-இலிருந்து    தான்  கடைப்பிடிக்கும்   ‘வெளிப்படைத்தன்மை,  பொறுப்புடமை,    செயல்திறமை’  கொள்கை   ஊழலையும்   அதிகார   மீறல்களையும்    தடுப்பதற்குப்   பெரிதும்   உதவியுள்ளது    என   பினாங்கு    அரசு   கடந்த    புதன்கிழமை    கூறிற்று.