ஞாயிறு நக்கீரன்-15.7.2017. இன்று ஜூலை 15-ஆம் நாள் கர்மவீரர் காமராசருக்கு பிறந்த நாள். இந்தியாவின் போக்கை திசை திருப்பியவர், அரசியல் சிற்பி காமராசர். பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவரை, 1960-ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு தங்கள் நாட்டிற்கு விருந்தாளியாக அழைத்தன. அந்த அளவிற்கு அரசியல் மேதையாகத் திகழ்ந்த காமராசர், ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தேசியக் கட்சியின் தலைவர் எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கும் தகுந்த சான்றாக வாழ்ந்து காட்டியவர்.
பஞ்சசீலக் கொள்கையில் கையொப்பமிடுவதற்காக டாஷ்கண்ட் சென்ற பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, மர்மமான முறையில் இறந்ததால், புது டில்லி ஆட்சி நிர்வாகத்தில் திடீரென வெற்றிடம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்(1966) மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதை முறியடித்து இந்தியாவை ஒரு பெண் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து, நேரு குடும்பத்தின்பால் வைத்த பற்றும் காமராசரின் மனதைத் தொற்றிக் கொள்ள, இந்திரா காந்தியை இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆக்கினார் காமராசர்.
அந்த முடிவுதான், தமிழினத்தை, அதன் தலைநிலத்திலேயே இன்று மெல்ல மெல்ல அழித்து கொண்டிருக்கிறது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்தில், 1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி முதல்வரானார் அறிஞர் அண்ணா. அதைக் கண்டு பொறுக்கமாட்டாத இந்திரா, அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் என்பவரைத் தூண்டிவிட்டு, காவிரி ஆற்றுக்கு தண்ணீரைக் கொண்டு வரும் துணை நதிகளான கபினி, ஹேமாவதி, சொர்ணமுகி, சாரங்கி உள்ளிட்ட ஐந்து நதிகளிலும் அணைகளைக் கட்ட வைத்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார்.
அத்துடன், 1974-இல் காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, இதன் தொடர்பில் வழக்கு தொடர்ந்த அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை வஞ்சகமாக ஏமாற்றி திரும்பப் பெற வைத்தார். கர்நாடக மாநில அரசு இன்று கொழுத்துத் திரிவதற்கும் தமிழகத்தை ஒரு பொருட்டாக மதிக்காததற்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.
சென்னை மாகாணத்திற்காக மேட்டூர் அணையையும் மைசூர் மாகாணத்திற்கென கிருஷ்ண ராஜசாகர் அணையையும் கட்டிய ஆங்கிலேய நிருவாகத்தினர், அவற்றை அந்தந்த மாநில(மாகாண) மக்கள் முறையாக பயன்படுத்துவதுடன் ஐம்பது ஆண்டுகள் கழித்து அப்போதைய பாசனப் பரப்பு, இயற்கைச் சூழல், மழை வாய்ப்பு, மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் காவிரித் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று 1924-இல் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதுதான் காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தனைக்கும் 1969-இல் காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் என்றும் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு, புதுடில்லியில் அரசியல் நெருக்கடியை இந்திரா எதிர்கொண்டபோது, திமுக-வின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் நாஞ்சில் மனோகரன் தலைமையில் இந்திராவிற்கு வழங்கி ஆதரவு தெரிவித்தார் கருணாநிதி.
தமிழகத்தை வறண்ட பகுதியாக்க இரகசித் திட்டம் தீட்டியது போதாதென்று, தமிழக கடற்கரைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் விதமாக, தமிழக மக்களை ஒரு பொருட்டாகவேக் கருதாமல் தமிழ் மண்ணுக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார் இந்திரா காந்தி.
இப்படி இந்திரா காந்தி தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கு செய்த இரண்டகத்தால், தமிழ் மக்களின் நிலை தமிழ்நாட்டில் பெரும் கேள்விக்குறியாகி வருவது குறித்து இன்றளவும் எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழ் மக்களின் நலனிலும் மேம்பாட்டிலும் முகுந்த அக்கறைக் கொண்டிருந்த கர்ம வீரர் காமராசர், இந்திரா காந்தி எதிர்காலத்தில் இப்படி யெல்லாம் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
மற்றபடி, காலமெல்லாம் ஏழைப் பங்காளனாகவே வாழ்ந்த காமராசர், அதே இந்திராவால் பழிதீர்க்கப்பட்டதுதான் கொடுமை. எது எவ்வாறாயினும், தமிழர்கள் மனதில் காமராசருக்கு என்றென்றும் இடம் உண்டு. 1975-ஆம் ஆண்டில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாளில் மறைந்த காமராசர், 1903-ஆம் ஆண்டு இதே நாளில் விருதுநகரில் பிறந்தார்.
இவரை காமராஜர் என்று எல்லோரும் அழைக்க, தந்தை பெரியார்தான் காமராசர் என்று அழைத்ததுடன். ‘பச்சைத் தமிழர்’ என்ற பட்டத்தையும் சூட்டினார்.
ஆனால் அடிமைகள் இந்திரா பாலம்..நேரு ஸ்டடியும் ..சாற்றி நகர் ..ராஜிவ் நகர் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றன ..எங்கே டெல்லியில் காமராஜ் பாலம் ..ராஜாஜி நகர் ..வெற்றிலை அண்ணா நகர் என்று பெயர் வைக்கட்டும் ….காமராஜ் தமிழ் நாட்டுக்கு சேரவேண்டிய திருவாங்கூர் ..மற்றும் பல எல்லை நகரங்களை எல்லாம் கேரளாவுக்கு கொடுத்து அங்குள்ள தமிழர்களை அடிமைகள் ஆக்கியவர்..காவிரி பிரச்சினையில் ..கச்சத்தீவு ஊழலை காட்டி நடமாடும் பிணத்தை பயமுறுத்தியவர் ..மேடையில் வாய் சவடால் விடும் ..வழுக்கை அரசியல் வியாதி அன்று இந்திரா பெரோஸ் கான் காலில் விழுந்தவன் . வட இந்தியர்கள் தமிழர்களை மதிப்பது கூட இல்லை ..கரணம் தமிழ் நாட்டு அரசியல் வியாதிகளை வாங்கலாம் ..விற்கலாம் ..வாடகைக்கு எடுக்கலாம்
ஐயா anonymous அவர்களே நீங்கள் கூறுவது மிகவும் உண்மை– தமிழர்களை இன்றும் மதராஸி என்றுதானே கூறுகின்றனர்? AR ரஹ்மானுக்கு லண்டனில் நடந்தது ஒரு உதாரணம். இன்னும் எவ்வளவோ. அங்குள்ளவர்களுக்கு அந்த நாற்றத்தில் பழக்கப்பட்டு விட்டது. TIMES NOW தொலைக்காட்சியில் தீபனசரி நடக்கும் விவாதத்தை பார்த்தால் புரியும் அங்குள்ளவர்கள் எப்படியான மனநிலையில் பேசுகின்றனர் என்று புரியும். மட ஈனங்கள்.
திலீப் குமார் என்ற இன்றைய ரஹ்மான் இசை அமைப்பாளர் சேகர் (இவர் ஒரு இந்து மனைவி கூட இந்து )என்பவரின் மகன் ..மதம் மாறிய பின்னர் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதில்லை …ஹி ஹி ஹி இந்த ரஹ்மானை லண்டன் அழைத்ததே ஈழ தமிழர்கள் ..அங்கெ இந்தி பேசி ..இந்தி பாட்டு பாட விடுவார்களா ?
புகழ் பெற்ற நடிகை வையந்திமாலா ..எங்கு போனாலும் கூடங்களில் தமிழில் தான் பேசுவார் …கூடவே தான் ஒரு தமிழ் பெண் என்று சொல்வார் ..வெளிநாடுகளில் கூட
“ஒரு மாநில முதல்வர் எப்படி இருக்க வேண்டும், தேசியத் தலைவர் தேசியக் கட்சியின் தலைவர் எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கு தகுந்த சான்றாக வாழ்ந்து காட்டியவர் “ -உண்மைதான். தமிழர்களுக்கும் சுயமரியாதையுண்டு- அதை அவர் கொஞ்சமும் மதிக்கவில்லையே! அன்று 1952-ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் படும் போது, கேரளாவிடம் இணைக்கப் பட்ட தமிழர்களுக்கு சேரவேண்டிய பகுதிகளை மீட்டுக் கொடுங்களென்று கோரிக்கை வைத்தப் போது, “உங்களுக்கு வேறுவேளையில்லையா?” யென்று அவர்களை விரட்டியடித்தவர்தான் இந்தக் காமராஜ். அவரால் ஏற்பட்ட இந்த இழப்புக்களை தமிழர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்; இதற்காக கேரளா வாழ் மக்களோ அல்லது அந்த அரசோ இந்த காமராசரை தலையில் தூக்கி வைத்தா இன்று ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாகயில்லை! இன்றும் தமிழகத்திற்கு வந்துக் கொண்டிருக்கின்ற ஆற்று நீரை தடுக்கின்றார்கள்; முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முரட்டுத்தனமாகவும், பொறுப்பில்லாமலும், மிகக் கேவலமாகவும் நடந்துக் கொள்கின்றார்கள். அவர்களின் பிறவிக் குணம் அப்படி! அன்று காமராசர் அவர்கள் செய்தத் தவறால் அதன் பின் விளைவுகளை இன்றும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆதலால், மற்றவர்களுக்கு வேண்டுமானால் காமராசர் நல்லத் தலைவராகயிருக்கலாம்; அவரால் தமிழர்களுக்கு இன்று ஏற்பட்ட இழப்புக்களைப் பார்க்கும் போது அவரிடம் கொஞ்சமும் தூர நோக்குப் பார்வையில்லையே! அப்படியென்றால் அவர் எப்படி நல்லத் தலைவராகயிருக்க முடியும்!.