14 ஆவது பொதுத்தேர்தல் வழியாக கூட நஜிப்பை மகாதிர் வீழ்த்துவது அவருக்கு கடினமாக இருக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷகிடான் காசிம் கூறுகிறார்.
இது தெளிவானது. நஜிப் பாரிசான் நேசனல் தலைவர். அதற்கு நாடாளுமன்ற மக்களவையில் 132 இருக்கைகள் இருக்கிறன. பார்டி பிர்பூமி பெர்சத்து மலேசியாவுக்கு இருப்பது ஒரே இருக்கைதான் என்று கூறிய அவர், 132 இருக்கைகளை வைத்திருக்கும் நஜிப்பை ஒரே ஒரு இருக்கையைக் கொண்டவர் வீழ்த்துவது சுலபமல்ல என்றாரவர்.
பிரதமர்துறையில் ஓர் அமைச்சருமான ஷகிடான், நஜிப்பை வீழ்த்துவதற்கு தாம் திட்டமிட்டிருந்ததை மகாதிர் ஒப்புக்கொண்டது மீது கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.
பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவத்தின் மூன்று தலைவர்கள் பற்றி குறிப்பிட்ட ஷகிடான், அக்கட்சி நாடகம் நடத்துகிறது என்றார், ஏனென்றால் அதில் டிஎபி பிரதிநிதி இல்லை என்றார்.
பக்கத்தான் ஹரப்பின் வெளியிட்ட அதன் புதிய தலைமைத்துவ பட்டியலில் மகாதிர் அவைத் தலைவர், அன்வார் இப்ராகிம் நடப்பில் தலைவர், வான் அசிஸா வான் இஸ்மாயில் தலைவர்.
அக்கூட்டணியில் சக்திவாய்ந்த கட்சி டிஎபி. ஆனால், அதற்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
புத்ரா ஜெயாவில், மற்றொரு அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் காப்ரவி இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.