அரசாங்கம் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்யும் மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு குடிமைப் பயிற்சி (பிடிஎன் (Biro Tata Negara)) தோற்றுவிக்கப்பட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
அவ்வகையில், பிடிஎன் இன்னும் பொருத்தமானதாக இருக்கிறது. அது தொடர்ந்து அதன் பங்கை அடுத்தப் பொதுத்தேர்தலிலும் அதற்கடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் ஆற்ற வேண்டும்.
தலைமைத்துவம் தொடர்ந்து இருத்தல் மற்றும் இனம், சமயம் மற்றும் நாடு என்ற பெயரில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் பிடித்திருத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யும் ஓர் அரசாங்கம் இருப்பதற்கு உத்தரவாரம் அளிக்கும் உந்துதலை மலேசியர்களிடையே உருவாக்க வேண்டும் என்பது பிடிஎன்னுக்கான பங்கு மற்றும் அது நிறுவப்பட்டதற்கான நோக்கமும் ஆகும் என்று நஜிப் கூறினார்.
இதன் அடிப்படையில், பிடிஎன் நிலைநிறுத்தப்பட வேண்டும். அது இன்னும் பொருத்தமானதாக இருக்கிறது என்பதோடு அதன் பங்கை இன்று வரையில் ஆற்றி வருகிறது. நமது வெற்றியை உறுதிசெய்வதற்கு அதனை அது தொடர்ந்து 14 ஆவது, 15 ஆவது, 16 ஆவது மற்றும் 17 ஆவது பொதுத்தேர்தல்களில் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூரில் பிடிஎன் கழகத்தில் இன்று உரையாற்றிய நஜிப் கூறினார்.
தற்போதைய தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிய பிரதமர், அவர்கள் கடந்த காலப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அதிகம் படித்தவர்களாக இருப்பதோடு வசதியாகவும் இருக்கின்றனர். ஏன் என்று கேட்டு, பதிலும் அளித்தார்.
இது அரசாங்கம் மேற்கொண்ட போராட்டத்தின் விளைபொருள் என்று நஜிப் மேலும் கூறினார்.
பிடிஎன் 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கல்வி அமைவு மற்று பொதுச் சேவையின் வழியாக தேசப்பற்றை வளர்ப்பது அதன் நோக்கம்.
ஆனால், அது கடும் குறைகூறலுக்கு உட்படுத்தப்பட்டது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்காக இனவாதம் மற்றும் மத வெறி ஆகியவற்றை அது பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆமாம்டா– நீ எப்போது நியாயமான வழியில் செயல் பட்டு இருக்கிறாய்? பொய்யும் பித்தலாட்டமும் தானே உன் போன்ற நாதாரிகளின் வழி?உன் அப்பன் வழிதான் நீயும்.- அம்னோவும் அதே வழி.