பிரதமர் துறையிலிருந்து செயல்படும் பிடிஎன் (Biro Tata Negara) என்ற அமைப்பு நடத்தும் குடிமைப் பயிற்சியில் மாணவர்களிடையே இனவாதத்தையும், மலாய்க்காரர்களின் மேலாண்மை தத்துவத்தையும் பரப்புகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டில் எழுந்தது.
பிடிஎன் பயிற்சியில் இந்நாட்டு இந்தியர்களும் சீனர்களும் பெண்டாத்தாங் என்று மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.
சீனர்களையும் இந்தியர்களையும் பெண்டாத்தாங் என்று கூறுவது அச்சமூகங்களை அவமதிப்பதாகும். ஆகவே, அச்சொல் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று 6.11.2015 இல் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் அக்கட்சியின் 67 ஆவது மாநாட்டில் பேசுகையில் கேட்டுக்கொண்டார்.
இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டில் ஆறு தலைமுறைக்கு மேல் இருந்துள்ள போதிலும் அவர்கள் அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்றாரவர்.
இந்த விவகாரம் பிஎன் தலைமைத்துவத்தால் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதுடன் இது தொடர்ந்து அனுமைதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சுப்ரமணியம் வலியுறுத்தினார்.
அம்மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.
மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியத்தின் கோரிக்கை உடனடியாக மறுக்கப்பட்டது.
பெண்டாத்தாங் என்பதில் எந்தத் தவறும் இல்லை
பெண்டாத்தாங் என்று சொல்லில் தவறும் ஏதும் இல்லை. பிரச்சனை அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் என்று பிடிஎன் இயக்குனர் ராஜா அரிப் ராஜா அலி எதிர்வினை ஆற்றினார்.
சீனர்கள், இந்தியர்கள், இபான், கடஸான் ஆகியோர் மலேசிய குடிமக்கள்; ஆனால், அவர்களின் பின்னணி வேறு நாட்டவர்கள். மலேசியாவிலிருக்கும் பல இனத்தவர்களின் வரலாற்று பின்னணியை மறுக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
இந்நாட்டுக்கு வரும் வங்காளதேசிகளுக்கும்கூட அவர்களுடைய வரலாறு இருக்கிறது. “வரலாற்றை மறுக்காதீர்” என்று ராஜா அரிப் ராஜா அலி போதித்தார்.
பிடிஎன் பயிற்சி தேவைப்படுகிறது
பிஎன் கூட்டணி எதிர்கால -14 ஆவது, 15 ஆவது, 16 ஆவது. 17 ஆவது – பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறுவதை உறுதிசெய்துகொள்வதற்கு பிடிஎன் தேவைப்படுகிறது என்று பிரதமர் நஜிப் நேற்று கூறியிருந்தார்.
கர்பால்…
இந்த பிடிஎன் பயிற்சியில் போதிக்கப்படும் பலவற்றில் ஒன்று மலாய்க்காரர்கள் மந்திரம் (போமோ) செய்வதில் ஈடுபடக்கூடாது. ஆனால், கர்பால் சிங்கை கொல்வதற்கு அதைச் செய்யலாம் என்று ஒரு வகுப்பில் கூறப்பட்டதாக அந்த வகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு மாணவர் டிஎபி தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாக செய்தி வெளியாகியிருந்தது.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்ட
மலாய் சமூகமும்,
அவர்களுக்கு விஷ ஊசி ஏற்றிய மகாதீரும் !
அமரர் துன் V.T. சம்பந்தன் அவர்கள் மலாய் சமூகத்தினரின்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ( BERTOLAK ANSUR ) பற்றி
பல வருடங்களுக்கு முன்பே புகழ்ந்து சொல்லியிருக்கிரார்,
அவர் “ 1960 களில் பர்மா என்று அழைக்கப்பட்ட மியென்மாரில்
செழிப்பான பொருளாதார வழமுடன் வாழ்ந்த பல லட்சம்
தமிழர்களை அகதிகளாக்கி, ஒட்டுத்துணியுடன் கப்பலேற்றி
தமிழகம் அனுப்பி வைத்தது அப்போதைய மியென்மார்
அரசாங்கம் ! சிலோன் ( ஸ்ரீ லங்கா ) வாழ் தமிழர்களுக்கும் ,
இதே போல் சிங்களவர்களால் பல தொல்லைகளுக்கு ஆளான
தமிழர்கள், கூட்டம் கூட்டமாக அங்கிருந்து பெயர்ந்து கடல்
மார்க்கமாக நடந்தே தமிழகம் வந்து அடைக்கலமானவர்கள்
சில லட்சம் . ஆனால் மலேசியாவில் சிறுபான்மை மக்களாக
வாழும் நமக்கு மலாய்க்காரர்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை “
என்று கூறி சந்தோசப்பட்டார் . அவரின் இந்தகூற்று உன்மைதான்,
ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல, மகாதிர் கையாண்ட பல
விஷ ஊசிகளில் பிரதானமானது, அவரால் எழுதிய ,
“ MALAY DELIMA “ என்ற புத்தகத்தில் மலாய்க்காரர்களை தவிர
இந்த நாட்டில் குடியேறிய இந்தியர்களும், சீனர்களும் வந்தேறிகள்
( PENDATANG ) என்று எழுதியதுதான் ! இன்னும் பல
விஷமத்தனமான கருத்துக்களால் நிறைந்த அந்த புத்தகத்தால்
மலாய்காரர்களுக்கும், இந்தியர்ளுக்கும், மற்றும் சீனர்களுக்கும்
இடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டது . அதன் பிறகு இவரால்
மலாய்காரர்கள் மத்தியில் நடைபெரும் சந்திப்பிலும் அல்லது
கூட்டங்களிலும் நம்மை KAUM PENDATANG என்று குறிப்பிட இவர்
மறந்ததே இல்லை ! இப்படியாக மலேசிய இந்தியர்களை
இரண்டாம் தர குடிமக்களாக்கிய பெறுமையும், புன்னியமும்
இந்தபுன்னியவான் மகாதீரையே சேரும்.
இந்த கம்மனாட்டி எங்கிருந்து வந்தான்? பூர்வீகக்குடிகளே உண்மையான பூமிபுத்ராக்கள். இவனைவிட ராஜராஜ சோழனே கடாரத்தில் முதலில் காலூண்டியவன்- அப்படி இருக்கையில் இந்த நாதாரிக்கு சரியான அடி கொடுக்க வேண்டும். இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது நம்ம காக்கா.
பி தி என் இயக்குனர் ராஜா அரிப்பின் சொல்வது உண்மையாக இருப்பின் இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்து குடியுரிமை பெற்ற மலாய் இனத்தவரும் குறிப்பாக திரு அஹமட் ஜைடியும் (Ahmad Zaidi ) அவர்களும் பேண்ட்தாங் ( Pendatang ) என்பது உண்மையாகும் , நாமும் அவ்வாரே அவர்களை அழைக்கலாம் தப்பில்லை .
இந்த விஷ ஊசி திரு மகாதீர் , முகுடின் இருவரும் இணைந்து உள்ள கட்சியில் இன ஒதுக்கீடு தற்போதே தொடங்கி விட்டது என்பதனை நன்கு அறியலாம் , அதன் காரணமாகவே இந்த இருவரும் உருவாக்கி உள்ள கட்சிக்கு நமது ஒட்டு இல்லை என்பது உண்மை . அந்த கட்சிக்குள் கூட்டு சேர்ந்துள்ள கட்சியில் உள்ள நமது இந்திய வேட்பாளர்கள் நமக்கு சேரவேண்டிய அணைத்து செயல்பாடுகளுக்கும் சம்மதம் பெற்று அதனை வழிமுறை படுத்தினாலே அவர்கள் தொகுதியில் வெற்றிப்பெற முடியும் , இல்லையேல் பதவியை இழக்க நேரிடும் என்பது உண்மை .
இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்த துரோகிக்கு இவனுடன் சேர்ந்துள்ள எவனுக்கும் மானம் மரியாதையும் ,சுய புத்தியும் உள்ள எந்த தமிழனும் இவனுக்கு ஆதரவு வழங்க கூடாது !! இவன் ஒரு சுயநல பேய் !! மகனுக்கு பதவி வேண்டும் என்பதற்காக மீண்டும் மக்களை குழப்பி கொண்டிருக்கிறான் !
1. TAPAH BALAJI – அவர்களே, நல்லத் தகவல்களைத் தந்துள்ளீர்கள்; இதன் முக்கியத்துவத்தையுணர்ந்து இந்தத் தகவல்களனைத்தும் நம் மக்களனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். இனிமேல் நடப்பது நல்லதாகவேயிருக்கட்டும். இந்தியாவைவிட இங்குள்ள மலாய் சமுகம் எவ்வளவோ மேல்! பர்மாவில் நம் மக்கள் அகதிகளாக வெளியேற்றப் பட்டப் போது இந்தியா வேடிக்கைப் பார்த்தது. இலங்கையிலும் நடந்தது இதுதான். வேடிக்கைப் பார்த்தாலும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். வெளிப்படையாக பேரினவாத சிங்கள அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள்; இன்றும் அப்படித்தான். ஜெனீவா ஐநா மனித ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் கொண்டு வந்தப் போது இலங்கைக்கு ஆதரவாக நின்றார்கள். இரண்டு முறை போர்க் குற்றச் சாட்டை வழுவிழக்கச் செய்தார்கள்! போரென்றப் பேரில் இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கெதிரான வெளிப் படையான இனப் படுகொலை. இந்தியா இலங்கைக்கு ஆதரவாக அன்று ஐநா மனித உரிமை ஆணையத்தில் எப்படி நடந்துக் கொண்டார்களென்று எல்லோரும் அறிந்ததே. 2. நீங்கள் பர்மா அகதிகளை பற்றிப் பேசினீர்கள்; அதனால்தான் இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்கின்றேன். பர்மாவில் நம் மக்கள் அன்று சந்தித்ததை இன்று சிறுப்பான்மை இனமான ரோஹின்யாஸ் அனுபவித்துக் கொண்டு வருகின்றார்கள்; இந்த, பர்மா, இலங்கை இரண்டு ஊருக்குமுள்ள ஒற்றுமை, இந்த இரண்டு நாடுகளிலும் ஒரே மதம்தான் அதிகார பூர்வ மதம். அங்கே மதச் சார்பற்றக் கொள்கைகளுக்கு மரியாதையில்லை. இதற்க்கு மேல் நீங்கள் மற்றவைகளை புரிந்துக் கொண்டால் சரி. மேலும் இந்திய நாட்டுச் சுதந்திரத்திற்காக அன்று ஆங்கிலேய அரசுக்கு எதிராக உலகில் வாழ்ந்த தமிழர்களெல்லாம் போராடினார்கள்; இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியாவை விட உயிர்ப் பல நீத்தார்கள். ஆனால் இன்று தமிழர்கள் செய்த நன்றியை இந்திய ஆட்சியாளர்கள் மறந்து விட்டத்தைப் போல் தோன்றுகின்றது. மற்றப்படி மகாதீர் அவர்கள் இந்திய ஆட்சியாளர்களை விட எவ்வளவோ மேல்!
பி.டி.என்.வகுப்பில் எல்லா இன மாணவர்களும் படிக்கிறார்கள்.அங்கு மலாய்க்காரர்களை மட்டும் உயர்த்தி மற்ற இனங்களை தாழ்த்தி போதிக்கப்பட்டால் அங்கு மற்ற இன மாணவர்களுக்கு உண்டாகும் தர்மசங்கடமான நிலையை சம்பந்தப் படடவர்கள் உணர விடும்.இது நாகரீகமான செயல் அல்ல.இது சம்பந்தப்பட்ட மாணவர்களை உள ரீதியில் பாதிக்கச் செய்யும்.மகாதீர் காலத்தில் தூவப்பட்ட இந்த இனவாத விதை இன்று ஆலமர விருட்ச்சமாக தழைத்தோங்கி வளர்ந்துகொண்டிருக்க அதுக்கு நீரூற்றி செழிப்பாக வளரவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.இக்கால பிரதமர்.அதனை பொது தேர்தலுக்கும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார்.சபாஷ்.இந்த விஷயம் BN -ல் ஒட்டிக்கொண்டிருக்கிற மற்ற இன கட்சிகளுக்கும் தெரியும்.ஆனால் சும்மாகட்டிக்கும் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவ்வள்வுதான். கேடடால் “எனக்கு என்னப்பா தெரியும்.பக்கத்துக்கு வீட்டு நாய் குறைத்து. அதனால் நானும் குறைத்தேன்.’ என்று கதைப்பார்கள்.ஆனால் நம்மைவிட பிரதமர் நஜீப் நன்றாக உணர்ந்துள்ளார். அதாவது குறைக்கிற நாய் கடிக்காது என்று.