பாரிசான் நேசனலில் அம்னோதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அது மலாய்க்காரர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தத் தவறி விட்டது என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் கூறுகிறார்.
பாரிசானில் அம்னோ ஆதிக்கமுடையதாக இருப்பதை மலாய்க்காரர்கள் விரும்புகிறார்கள். அது அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் தற்காக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
“ஆனால், நாம் பெல்டா, மாரா, தாபுங் ஹஜி மற்றும் மலாய் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளை கவனித்தால், அவை அனைத்தும் அம்னோ தலைவர்களால் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன”, என்று முக்ரீஸ் கூறியதாக சினார் ஹரியான் இன்று தெரிவிக்கிறது.
முன்னாள் கெடா மந்திரி புசாரான முக்ரிஸ் மூன்று தலைவர்களைக் கொண்ட ஹறப்பான் தோல்வியடையப் போகிறது என்ற துணப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் கூற்றுக்கு பதிலாக இவ்வாறு கூறினார்.
மூன்று தலைவர்களைக் கொண்ட தலைமைத்துவத்தில் தவறு ஏதும் இல்லை என்று கூறிய முக்ரீஸ், அது பாரிசான் தலைமைத்துவ கட்டமைப்பைவிடச் சிறந்தது என்றார்.
ஹரப்பான் அனைத்து கட்சிகளுக்கும் இடமளிக்கும் தலைமைத்துவ கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் காட்டுவதற்கான நேரம் இது என்று தாம் நினைப்பதாக முக்ரீஸ் மேலும் கூறினார்.
திப்பு