அடுத்து பொதுத் தேர்தல் செப்டம்பர் மாதத்துக்குமுன் நடத்தப்படாது என்று துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நேற்று உறுதியாகக் கூறினார்.
“(செப்டம்பர் என்பது) மிகவும் பக்கத்தில் இருக்கிறது. அது (பொதுத் தேர்தல்) அதன் பிறகுதான் நடத்தப்படும்”, என ஜாஹிட் கூறியதாக சேனல் நியுஸ் ஆசியா அறிவித்துள்ளது.
நேற்று, கோலாலும்பூர், புத்ரா உலக வாணிக மையத்தில் அம்னோவின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அவகாசம் உள்ளது. ஆனால், அவர் முன்கூட்டியே நடத்துவார் என்றே பரவலாக ஊகிக்கப்படுகிறது.