மக்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஐயா. கடமை. எம்ஆர்டி திட்டத்தை மக்களுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அன்பளிப்பு” என்று கூறிய தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்குக்கு என பிகேஆர் தலைமைப் பொருளாளர் டான் ஈ கியு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
“சாலேயால் அன்பளிப்புக்கும் ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புக்குமுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லையா?”, என்று டான் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.
“சுங்கை பூலோ- காஜாங் எம்ஆர்டி ரயில் பாதைக்கு ரிம21 பில்லியன் செலவானது. அரசாங்க கஜானாவில் இருப்பது ஜிஎஸ்டி போன்ற வரிகளால் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணம்.
“அதனால், எம்ஆர்டி திட்டத்தை ஓர் அன்பளிப்பு என்று சொல்லாதீர்கள்”, என டான் கூறினார்.
அம்னோ- பிஎன் அரசாங்கத்தின் உண்மையான “அன்பளிப்புகள்” எவை என்றால் “கொடூரமான” ஜிஎஸ்டி, 1எம்டிபி ஊழல், மக்களுக்குத் தொல்லைதரும் விலைவாசி உயர்வு ஆகியவைதான் என்றாரவர்.
அதன் தலைவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்களை வாட்டி வதைக்கிறது அம்னோ- பிஎன் அரசாங்கம் என்று டான் கூறினார்.
மக்களின் வரி பணத்தைக் கொண்டு அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இது எப்படி அன்பளிப்பு என்கிறார் அமைச்சர்?
யார் என்ன கூறினாலும், முகத்தில் காரி உமிழ்ந்தாலும் யாவற்றையும் புன்னகைத்தவாறே துடைத்துக்கொண்டு, அவரவர் வழியில் போய்க்கொண்டே இருப்பார்கள் ! துணிச்சலான அறிக்கைகாக PKR தலைமைப் பொருளாளரைப் பாராட்டத்தான் வேண்டும்.
அன்பளிப்பு என்றால் பயணங்களுக்கு கட்டணம் வாங்க மாட்டீர்களா அமைச்சரே..
1MBD தான் உண்மையான அன்பளிப்பு , அரசாங்கத்திடம் இருந்து …. அதிலும் இந்த சிகப்பு வைரக்கல் இருக்கே ….. அடி என்னடி ராக்கம்மா பல்லாப்பு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி …. சிறு கண்ணாடி முக்குத்தி மாணிக்க சிகப்பு மச்சானை இழுக்குதடி ..
“அன்பளிப்பு” வாங்கியே பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன சொல்ல முடியும்? இலஞ்சம் இப்பொழுது அன்பளிப்பு என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.கொடுத்தாலும் அன்பளிப்பு வாங்கினாலும் அன்பளிப்பு.