மகாதிர் முகம்மட் தாம் பாக்கத்தான் ஹரப்பானில் பிரதமர் நஜிப்புக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சமமானவர் என்று நம்புகிறார்.
‘நான் ஹரப்பான் தலைவர்களில் ஒருவர். அவைத் தலைவர் என்ற முறையில் நான் தலைமைத்துவ மன்றத்துக்கு தலைமை ஏற்பேன்.
“ஹரப்பானின் தரவரிசைச்யில், நான்தான் வெற்றி வீரன்”, என்று மகாதிர் புத்ராஜெயவில் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கடந்த வாரம், மகாதிர் ஹரப்பானின் அவைத் தலைவர் என்றும், அன்வர் இப்ராகிம் நடப்பில் தலைவர் மற்றும் வான் அசிஸா வான் இஸ்மாயில் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
அம்மூன்று தலைவர்களிடையே சமமான அதிகாரப் பகிர்வு இல்லை என்பது அவரது கருத்தா என்று கேட்டதற்கு, நாட்டில் மூன்று பிரதமர்கள் இருக்க முடியாது என்றார்.
மூன்று பிரதமர்கள் இருக்க முடியுமானால், மூன்று தலைவர்கள் இருக்கலாம். தற்போதைக்கு, அரசமைப்புச் சட்டம் ஒரு பிரதமர்தான் இருக்கலாம் என்று கூறுகிறது.
“ஆகவே, கட்சிகளை வழிநடத்துவதற்கு முறையே ஒரு தலைவர் தேவைப்படுகிறார்”, என்று மகாதிர் கூறினார்.
எனினும், இது ஒரு வாய்வீச்சுதான். அது தாம் ஒரு பிரதமர் வேட்பாளர் என்று பொருள்படாது என்று அவர் மேலும் கூறினார்.
மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரதமமந்திரியாக
காட்டிக்கொண்ட மகாதிர்
மகாதீர் 1981 ரில் இன்நாட்டின் நான்காவது பிரதமராகிய
இரண்டே மாதத்தில் உலக பங்குச்சந்தைகளே மூக்கின் மீது
விரல் வைக்கும் அளவுக்கு இவரால் LONDON STOCK EXCHANGE
( LSE) என்ற இங்கிலாந்து பங்குச்சந்தையில் அங்குள்ள புரோக்கெர்
( BROKER ) மூலமாக மிக சாமார்த்தியமாக ஊடுருவி, GUTHRIE,
SIME DARBY மற்றும் HARRISON @ CROSFIELDக்கு சொந்தமான
பங்குகளை அந்த நிறுவனங்களுக்கு தெரியாமலேயே வளைத்து
போட்ட திறமையை ஆங்கிலேயர்கள் “ DAWN RAID SEP-1981”
என்றும், மலாய் மொழியில் SERANGAN SUBUH SEP-1981 என்றும்
கூறுவார்கள் . எல்லாம் சரிதான் ! ஆனால் நான் சொல்லவந்த
கதை அதுவல்ல, பெர்லிஸ் மானிலத்திலிருந்து ஜொகூர் பாரு
வரை ஏறக்குறைய 2 லட்சம் ஏக்கர் ரப்பர், செம்பனை
மற்றும் கொக்கோ விளைச்சல் நிலமாக இருந்த எஸ்டேட்
களுக்கு அன்று சொந்தக்காரர்களாக இருந்த பிரிட்டிஸ்
நிறுவனம்தான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூன்றும் .
இவைகளின் இன்றைய மதிப்பு பல ட்ரிலியன் ரிங்கிட்டுகள் ஆகும்.
இவ்வளவு பிரமாண்டமான சொத்துக்கள் அனைத்தும் ஒரு
சல்லிகாசு விடாமல் அப்படியே 100 சதவிகிதம் பூமி புத்ராக்களுக்கு
சொந்தமான PERMODALAN NATIONAL BERHAD ( PNB ) டுக்கு அப்படியே
திருப்பிவிடப்பட்டது ! இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று
நீங்கள் கேட்கலாம், அன்பர்களே ! இந்த மூன்று நிர்வாகத்துக்கு
சொந்தமான அந்த 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் கூலிக்கு மாறடித்த
கூட்டம்தான் நம் இந்திய சமூதாயம் . இது உலகமே அறிந்த
உன்மை. ஆனால் மகாதீரோ இந்த ஏழை சமூதாயத்தின்
முன்னேற்றத்துக்காக அந்தபிரமாண்ட சொத்தில் ஒரு மிகச்சிறிய
பகுதியையாவது ஏதாவது ஒரு திட்டம் உருவாக்கி இந்திய
சமூதாயம் முன்னேர உதவி இருக்கலாம். என்ன செய்வது
அப்படி ஒரு பரந்த மனது அவருக்கு இல்லை !
காரணம், அவர் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரதமராக
தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார் !
இந்த ஹிட்லர் மகாதீர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்தக்கட்சிஎதிர்காலத்தில் இந்தியர்களின் புதைகுழி என்பதை இந்த சமூகம் மறந்து விட வேண்டாம் .
TAPAH BALAJI அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை–ஆனால் ஐயா சாமி என்ன பிடிங்கிக்கொண்டிருந்தான்? காக்காத்திமிரை நக்கி நக்கி தன்னுடைய வங்கிக்கணக்கை கூட்டிக்கொண்டுதானே இருந்தான்? இப்போது மட்டும் என்ன நடக்கிறது? MIC -நக்கிகள்.
அனைத்தும் அறிவோம் , நெஞ்சம் படபடகிடறது , என்ன செய்வது , நமக்காக பல கட்சிகள் இருந்தும் கோட்டைவிட்டோம் . இன்னும் கொஞ்சம் நஞ்சம் இருப்பதையும் இழக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை . நாம் ஒன்று படுவோம் , நம் ஒற்றுமையை காண்பிப்போம் . தமிழனாகிய நாம் , நம் மொழியை வளர்ப்போம் , நம் கலையை வளர்ப்போம் , நம் மதத்தை வளர்ப்போம் , நம் நமக்குத்தானே வளர்த்துக்கொண்டிருக்கும் வன்முறையை வேற்றாருப்போம் , நல்வழியில் நம் சிந்தனையை விரித்து முன்னேறுவோம் .
எந்த ஆட்சி வந்தாலும் தமிழனுக்கு உதவ போவதில்லை .தமிழனை யாரும் மதிப்பதில்லை என்பது இன்றைய வாழ்வில் தெள்ளத்தெளிவு .அரசியல் வெற்றிக்கு எண்ணிக்கை அவசியம். அது நம்மிடம் இல்லை .மிகச்சிறுபான்மையாக இருக்கும் நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே நம் மொழி இனம் கலை கலாச்சாரம் யாவும் இந்நாட்டில் நிலைக்கும்.