சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை ரொட்டி சானாயும் தே தாரிக்கும் சாப்பிட அழைப்பு விடுத்துள்ளார். ரபிசி, ஜமாலைப் புகழ்ந்து பேசிவிட்டாராம் அதற்காகத்தான் இந்த அழைப்பு.
அம்னோ இளைஞர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி தன்னிடம் இருப்பதாக ரபிசி கூறியிருந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக ஜமால் குறிப்பிட்டார். ஜமால் அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரானால் அவருக்காக பரப்புரை செய்யவும் தயார் என்று ரபிசி கூறியிருந்தார்.
“ரபிசிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரொட்டி தே தாரிக் வாங்கிக் கொடுப்பதன்வழி அதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
“அவர் சொல்வது உண்மையென்றால் நான் சொல்வதும் உண்மைதான். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது பாண்டான் சென்று அவருடன் உணவருந்த நான் தயார்”, என ஜமால் குறிப்பிட்டார்.
ரபிசி ஜமாலைத் “துணிச்சல்காரர்” என்று பாராட்டியிருந்தார். பொது இடத்தில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு உலா வரும் துணிச்சல் உள்ள அவருக்கு ஒரு பொது விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காத்து வாதாடும் துணிச்சலும் நிச்சயம் இருக்கும் என்றாரவ