கிளந்தான் அரசு ஷியாரியா குற்றங்களுக்குப் பொது இடத்தில் பிரம்படித் தண்டனை கொடுப்பதைக் கூட்டரசு அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) கேட்டுக்கொண்டுள்ளது.
சுஹாகாம் தலைவர் ரசாலி இஸ்மாயில், “நாடு முழுக்க மனித உரிமைகள் மதிக்கப்படுவதை” அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
பிரம்படி “கொடூரமான, மனிதாபிமானமற்ற” தண்டனை. அது மலேசியா கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஒப்பந்தங்களை மீறுகிறது என்றாரவர்.
இப்படி பேசியதற்காக உங்களுக்கு பிரம்படி கொடுப்பார்களா, தெரியவில்லை!
பொது இடத்தில் முக்காடு போடாமல் , முகத்தை மறைக்காமல் தவறு செய்தவர்கள் குறிப்பாக இலஞ்சம் வாங்குபவர்களுக்கு பிரம்படி கொடுப்பதில் தவறவில்லை என நான் உணர்கிறேன் , அதன் பயனாக தற்போது நாட்டில் தைலைவிரித்தாடும் உழலும் , வன்முறைகளும் குறைய வாய்ப்புஇருப்பதாக நம்பிக்கை கொள்கிறேன் . எனது உணர்வுப்படி ‘போலே தூத்துப்’ (boleh tutup ) என்ற போர்வையில் இலஞ்சம் விளையாடுவதின் காரணத்தினாலையே நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .
T.Sivalingam@சிவா, அருமையான கருத்து. ஆனால் அதை செய்பவன் உத்தமனா ? பணம் விளையாடும் விளையாட்டில் பலியாகுவது ஏழைகளே… காலம் கடந்த உண்மைக்கும் அனுபவித்த தண்டனைக்கும் இழந்த உறுப்பு / மானம் ஈடு கட்ட முடியுமா? மதத்தின் பேரில் எத்தனை வன்முறை. இறைவன் கட்டளை, சரியான ஒழுக்கம் கற்பித்தல் என்று அனைவரையும் ஒரே மதத்திற்கு கட்டாயமாக திணிப்பது முறையோ????
குற்றத்திற்கு அடிப்படை என்ன என்று கண்டு அதை கலைவதே சிறந்தது … தண்டனை மேலும் பழிவாங்கும் உணர்வை மேலோங்கும் ; முடிவில்லாதது.. குற்றம் தொடர்கதை அல்ல தொடர்வதற்கு.. இதுவே என் கருத்து. தவறு இருப்பின் மன்னிக்கவும்…
மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) – பற்கள், நகங்கள் இல்லாத ஒரு புலி. ஏதோ தனது பங்கிற்கு நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்கிறது.