கைதான 28 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பு

Slide1நேற்று மாலை, கைதான 27 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் பாஹாவ் நீதிமன்றத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தங்களுக்குக் கால அவகாசம் தேவை எனக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, சுமார் 9 மணியளவில் கைதான 27 பேரும், கைவிலங்கிடப்பட்டு பாஹாவ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். கைதானவர்களின் சார்பில் வழக்குரைஞர் சிவராம் நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் , ஆர். காந்தி மற்றும் கைதானவர்களின் குடும்பத்தாரும் இன்று காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.

கைதான அனைவருக்கும் 3 நாட்கள், வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Slide2அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஜெம்பூல் மாவட்ட போலிஸ் தலைமையகத்துக்குக் கைரேகை பதிவு செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். கைரேகை பதிவுக்குப் பிறகு, பெண்கள் பாஹாவ் காவல்நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை , நெகிரி செம்பிலான், கட்கோ நிலத்திலிருந்து சட்டவிரோதமாக ரப்பர் மரங்களை வெட்டி, ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 27 குடியிருப்பாளர்கள், 60 பேர் கொண்ட காவல்துறை குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தாமரை நிறுவனம் ரப்பர் மரங்களை வெட்டி, வெளியேற்றுவது சட்டத்திற்குப் புறம்பானாது எனக்கூறி, குடியிருப்பாளர்கள் லாரிகளைத் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

தாமரை நிறுவனத்திற்கு எதிராக கட்கோ குடியிருப்பாளர்கள் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு எதிர்வரும் ஜூலை 25-ல் விசாரணைக்கு வரவுள்ளது.