இந்திய முஸ்லிம்களுக்குப் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும் பரிசீலனையில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என, மலாய்க்காரர்கள் உரிமை குழு (பெர்காசா) புத்ரா ஜெயாவைக் கேட்டுக்கொண்டது.
தற்போது , பூமிபுத்ரா அந்தஸ்து (மண்ணின் மைந்தர்கள்) மத அடிப்படையில் இல்லாமல், ஒரு நிலத்தின் பூர்வீக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே, சபா மற்றும் சரவாக் பூர்வீகர்களும் பூமிபுத்ராவாக அங்கீகரிக்கப்பட்டனர் எனப் பெர்காசாவின் தோற்றுனரும் தலைவருமாகிய இப்ராஹிம் அலி சுட்டிக் காட்டினார்.
எனவே, பூமிபுத்ரா அந்தஸ்தை மத்திய அரசாங்கம் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறது என்பதை அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
“இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை, மத அடிப்படையில் வழங்கப்படுகிறதா? இல்லை, வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? பிற இன முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து பெறும் உரிமை உண்டா?”, என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இப்ராஹிம் அலி கேட்டிருந்தார்.
மலேசியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பிறந்தவர்கள், மலேசிய குடியுரிமை பெற்றபின், பூமிபுத்ரா அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களா? எனவும் அவர் கேட்டிருந்தார்.
“பல தாக்கங்களையும் பிரச்சனைகளையும் உள்ளடக்கிய ஓர் உணர்ச்சிபூர்வமான விசயம் இது. அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, குறிப்பாக, ஏற்கனவே உள்ள பூமிபுத்ரா இனத்தினரால் ஜீரணிக்கக்கூடிய விசயமா இது, என்பதை எல்லாம் பல கோணங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்”, என அவர் சொன்னார்.
ஒரு முடிவை எடுப்பதில் அவசரம் கூடாது என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு, வரலாறு மற்றும் எல்லோருடைய ஆதரவையும் கொண்டிருந்தால், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவையும் பெர்காசா ஆதரிக்கும் என அவர் மேலும் கூறினார்.
கடந்த புதன்கிழமை, இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஷாக் கூறியிருந்தார்.
மத்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பூமிபுத்ரா அந்தஸ்து தொடர்பாக எதுவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றாலும்; இதுநாள் வரை ‘பூமிபுத்ரா’ அந்தஸ்து கொண்டவர்கள், கல்வியில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வீட்டுமனை வாங்குவதில் 10% சிறப்பு கழிவு உட்பட, பல சமூகப் பொருளாதாரச் சலுகைகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்கள். இவர்களுக்கு பூமிப்புத்திரா தகுதிக் கொடுக்கப் பட்டால் இவர்களின் தாய்மொழியான தமிழுக்கும் அரசு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமே!. அப்படிக் கொடுத்தால் மகிழ்ச்சி. இதன் பின்னும், இனிமேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாட்டை ஆளுகின்ற அறிவுக் குறைந்தப் பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் தேசியம், ஒற்றுமை, இனங்களிடையே நல்லிணக்கமென்றப் பேரில் தாய் மொழிப் பள்ளிகளை முற்றாகத் மூடவேண்டுமென்று இன்னும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்களா? பூமிப்புத்திரா தகுதி மட்டும்தான் கொடுப்போம்; உங்கள் தாய் மொழிக்கு மட்டும் எந்த அரசு அங்கீகாரமுமில்லையென்றுச் சொல்லப் போகின்றார்களா?
நாங்கள் தமிழ் முஸ்லிம்கள் என்று சொல்லி கொள்வதில் தான் பெருமை படுகிறோம் . நாங்கள் இந்த நாட்டில் நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால் அது எங்களின் உழைப்பால் தான் . அரசாங்கம் எங்களுக்கு என்று எதயும் செய்ததும் இல்லை செய்ய போவதும் இல்லை . பிரியாணி சாப்பிட வந்தவர்கள் ஏதோ சொல்லி விட்டு சென்று உள்ளனர் . நாங்கள் உழைத்து முன்னேறுவோம் எங்களுக்கு எதுவும் தேவை இல்லை .
எல்லாம் சரி தான்! மலாக்கா செட்டிகளுக்கும், மலாக்கா போர்ச்சுகீசியர்களும் பூமிபுத்ரா அந்தஸ்து உள்ளவர்கள் தான்.ஆனால் மலாய்க்காரர்களுக்கு உள்ளது போல சலுகை இவர்களுக்கு இல்லை! அதே தான் இங்கும் நடக்கும்!
மத மாற்றத்திற்கு இதுவும் ஒரு நல்ல திட்டம்தான்.வாழ்க இஸ்லாம்…!
தேர்தலை முன்னிட்டு எடுக்கப்படும் திட்டங்கள்.மலேசியர்கள் அறிவில் மேம்பட்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.இனி மலேசியர்களை ஏய்க்கமுடியாது.
இஸ்லாம் என்றும் வாழும் அதை நீ சொல்ல வேண்டாம் முடிந்தால் உன் மதத்தையும் பரப்பு இந்திய ஆட்சியாலர்கள் செய்வதை போல.