உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் மலேசியாவில் அன்னிய தொழிலாளர்களைக் கொண்டுவரும் தொழிலில் வெளியில் தெரியாமால் உள்ளுக்குள் நடக்கும் பணப் பட்டுவாடாக்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் அல் ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவின் 101 East நிகழ்ச்சியில் “Malaysia’s Migrant Money Trail” என்ற தலைப்பில் அந்நிகழ்ச்சி ஒளியேறியது.
அந்நிகழ்ச்சியில் முகவர்கள் சிலர், அன்னிய தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவர உள்துறை அமைச்சிலும் குடிநுழைவுத்துறையிலும் உயர்நிலை அதிகாரிகள் உள்பட , பலருக்கு அடிக்கடி பணம் கொடுத்து வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.
“இவை காலங்கடந்த குற்றச்சாட்டுகள். உள்துறை அமைச்ச்சிலும் குடிநுழைவுத்துறையிலும் முகவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். 2017 ஏப்ரலிலிருந்து மிகவும் வெளிப்படையான இணையவழி விண்ணப்பம் செய்வதை அமல்படுத்தி வருகிறோம்.
“அதனால் அல் ஜசீரா நிகழ்ச்சியில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் காலங்கடந்தவை” என்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது நூர் ஜஸ்லான் கூறினார்.
மலேசியாவை ஊழல் நிறைந்த நாடாக்கிவிட்டார்கள் அரசியல் வாதிகள்.உலகமே கைகொட்டி சிரிக்கிறது.
சம்பவம் உண்மையாக இருப்பின் ஊழல் , இலஞ்சத்தை முன்னிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , அதுவே மிக சிறந்த வழி, அதை விடுத்து உண்மையை வெளிக்கொணர்வர்த்தவர்கள் மீது கண்ணடம் தெரிவிப்பது ஞாயம் இல்லை . தன் இனம் என்பதால் எதனையும் மறைக்க ஆவணசெய்யவேண்டாம் , மலேசியாவில் ஒரு இனம் என்றாள் உலகமே சிரிக்கிறது அந்த இனம் இலஞ்சம் இல்லாமல் வாழ முடியாது என்று . அந்த அவசச்சொல்லை மாற்ற முனைப்பு காட்டவும்
அன்று அல் ஜசீரா நேர்மையான/நடுநிலையான செய்திகளை வெளியிடுகிறது என சான்றிதழ் வழங்கியது அம்னோதான் என்பதால் இன்று அல் ஜசீரா வெளியிடும் செய்திகள் யாவும் நேர்மையான/நடுநிலையானவையாகத்தான் இருக்கிறது என்று மக்கள் உறுதியாக நம்புகிறாரகள்.
எனவே நூர் ஜஸ்லான் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் புலம்பி ஆக போவது ஒன்றுமில்லை.