பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவந்த மகாதிர், அந்நிலைப்பாட்டை அவர் இப்போது மாற்றிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக அவர் போட்டியிடக்கூடும்.
அந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பொருத்தமான ஒரு வேட்பாளர் கிடைக்காவிட்டால், போட்டியிடுவதற்கு மகாதிர் தயார்.
“பொருத்தமான வேட்பாளர்கள் இல்லையென்றால், அப்படிப்பட்ட நிலையில் நான் பெக்கானில் போட்டியிட வேண்டியிருக்கும்.
“ஆனால், நான் வெற்றிபெறுவதற்கான வல்லமை பெற்றிருக்க வேண்டும், நான் வெற்றிபெறுவதற்கு போட்டியிடுகிறேன்”, என்று மகாதிரை மேற்கோள்காட்டி சின் சியு டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், மகாதிர் அத்தொகுதியில் போட்டியிடுவதற்கான கடும் சித்தம் கொண்டிருக்கிறாரா என்பது தெளிவற்றதாக இருக்கிறது.
பெக்கானில் அல்தான்துயா நஜிப் பை எதிர்க்க இவரை விட்டால் வேறு எவருமே இல்லை என்ற நினைப்பு இந்த மகாதிமிருக்கு. யாராவது ஒருவர் நஜிப்பை எதிர்த்து நிற்கத்தான் போகிறார்கள். அவ்வமயம், இந்த மகாதிமிர் சொல்வார், ‘ஆஹா, நான் நினைத்தது போல அருமையான வேட்பாளர் ஒருவர், நஜிப்பை எதிர்க்கிறார்.’ எனக் கூறி இந்த ஆசாமி நழுவி விடுவார். இதுதான் மகாதிமிரின் அரசியல்.
காக்கா பெகானில் போட்டி இட்டு வெல்வது முடியாத ஒன்று-இப்போது இவன் காக்கா கெலிங் -மலாய்க்காரன் அல்ல.