சிறந்ததோர் எதிர்காலத்திற்கு மகாதிரின் கடந்த காலத்தை நினைவில் கொள்ளுங்கள், சாலே கூறுகிறார்

 

ThinkofpastofMகடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கு பிரதமர் என்ற முறையில் மகாதிர் புரிந்த தவறான செயல்களை மலேசியர்கள் மறந்துவிடக்கூடாது என்று தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார்.

அவர் செய்த தவறுகள்: பூமிபுத்ரா மலேசியா நிதி (பிஎம்எப்) விவகாரம் 1983, மெமாலி சம்பவம் 1985, மலேசிய ஏர்லைன்ஸ் தனியார்மயமாக்கப்பட்டது, 1997 ஆண்டு நிதி நெருக்கடி, அன்வார் இப்ராகிம்மின் முதல் தகாத உறவு வழக்கு, தலைமை நீதிபதி சாலே அபாஸ் நீக்கப்பட்டது மற்றும் ஜனநாயகத்தை “கீழறுத்தல்”, ஆகியவற்றை சாலே குறிப்பிட்டார்.

“இவற்றை எல்லாம் நாம் சாதாரணமாக மறந்துவிட முடியுமா?”, என்று சாலே அவரது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிமை வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், பழமையிலேயே மூழ்கியிருந்தால் எவருடனும் சேர்ந்து வேலை செய்யவே முடியாது என்று மகாதிர் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய சாலே இவ்வாறு கூறினார்.